கம்பராமாயணம் 1652 · அயோத்தியா 3.85

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“கொற்றவர் - அரசர்களும்; முனிவர் - இருடிகளும்; மற்றும் குவலயத்து உள்ளார் - பின்னும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்களும்; உன்னைப் பெற்றவன் தன்னைப் போல - உன்னைப் பெற்ற தயரதனைப் போல; பெரும் பரிவு இயற்றி நின்றார் - (உன்னிடம்) மிகுந்த அன்பைக் காட்டி நின்றார்; சிற்றவைதானும் - சிற்றன்னை யாகிய கைகேயியும்; ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அவனிடம் உன்னை அழைத்து வருமாறு சொன்னாள்; அப் பொன்தட மகுடம் சூட - (ஆதலால்) அந்தப் பொன்னால் ஆகிய பெரிய முடியை (நீ) சூடுவதற்கு; விரைவின் போதி - விரைவாக வருவாய்,” என்றான் - என்று சுமந்திரன் சொன்னான்.

கொணர்கென - தொகுத்தல் விகாரம்; அகரம் தொக்கது. அவை - அவ்வை; தாய்; இடைகுறைந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Kings, sages, and all others who dwell on earth
  2. stand showing you great love, as does he who begot you;
  3. and your younger mother too has said, "Bring him there"; to put on
  4. that broad golden crown, come quickly,' he said.

What the poem says

Cumantiraṉ tells Irāmaṉ that kings, sages and all the people are waiting for him with a love equal to his father's, and that Kaikēyi, his 'little mother' (stepmother), has asked for him to be brought to her.

He urges him to come quickly to be crowned. The reader, who knows what Kaikēyi intends, hears the summons very differently from the innocent messenger who delivers it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṟṟavar muṉivar, maṟṟum kuvalayattu uḷḷār uṉṉaip
peṟṟavaṉ taṉṉaip pōlap perum parivu iyaṟṟi niṉṟār;
ciṟṟavaitāṉum āṅkē koṇarka eṉac ceppiṉāḷ; ap
poṉ taṭa makuṭam cūṭap pōtuti viraiviṉ' eṉṟāṉ.