கம்பராமாயணம் 1657 · அயோத்தியா 3.90
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“அங்கணன் இவன் - அழகிய கண்களையுடைய இந்த இராமன்; அவனி காத்தற்கு ஆம் - இவ்வுலகைக் காப்பாற்றுவதற்குத் தக்கவன் ஆவான்; என்னல் ஆமோ - என்று கூறுதல் பொருந்துமோ? (பொருந்தாது); நம் கண் அன்பு இலன் - நம்மீது அன்பு இல்லாதவனாக இருக்கின்றானே;” என்று - என்று எண்ணி; உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் - மனம் தடுமாறுவதால் உடல் நடுங்கித் துன்புறுவாராக; “செங்கணும் - சிவந்த கண்களும்; கரிய கோல மேனியும் - கருநிறம் வாய்ந்த அழகிய திருமேனியும்; தேரும் ஆகி - தேருமாகப் பொருந்தி; எங்கணும் தோன்றுகின்றான் - (இராமன்) எங்குப் பார்த்தாலும் காட்சி தருகின்றான்; இராமன் எனைவரோ - இராமன் வடிவுடையோர் எத்தனை பேரோ;” என்பார் - என்று வியப்புடன் கூறுவார்.
நமக்கு அருள் புரியாதவன் எப்படி உலகத்திற்கு அருள்புரிந்து காப்பாற்றப் போகிறான் என்று மனம் தடுமாறினார்கள் அவன்மீது காதல் கொண்ட பெண்கள். காம மிகுதியால் பார்க்குமிடம் எங்கும் இராமனைக் கண்டனர். இஃது உருவெளித்தோற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Can one say that this lovely-eyed one is fit to guard the earth?
- He has no love for us,' they say, and, their hearts reeling, tremble and pine;
- 'With red eyes and a dark, lovely body and a chariot,
- he appears everywhere; how many Irāmaṉs are there?' they say.
What the poem says
The lovesick women complain: how can a man who shows no kindness to them be fit to protect the whole world? Their hearts reel and they tremble with longing.
Wherever they look, they see Irāmaṉ, red-eyed, dark and beautiful, in his chariot, and they wonder aloud how many Irāmaṉs there can be. The commentary names this the vision of the beloved's form everywhere, born of intense desire.