கம்பராமாயணம் 1658 · அயோத்தியா 3.91
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மகளிர் எல்லாம் - பெண்கள் எல்லாரும்; இனையராய் - இத் தன்மையினராய்; இரைத்தனர் - ஆரவாரித்து; நிரைத்து மொய்த்தார் - கூட்டமாக (இராமபிரானை) நெருங்கினார்கள்; முனைவரும் - பற்றற்ற முனிவர்களும்; நகர மூதூர் முதிஞரும் - அயோத்தி நகரமாகிய அந்தப் பழைய ஊரில் வாழும் மூத்தவர்களும்; இளைஞர்தாமும் - சிறியவர்களும்; அனையவன் மேனி கண்டார் - இராமபிரானது திருமேனி அழகைக் கண்டு; அன்பினுக்கு எல்லை காணார் - அவன் மீது கொண்ட அன்புக்கு வரம்பு காணாமல்; மனத்தால் நினைவன - மனத்தால் நினைப்பனவற்றையும்; வாயால் நிகழ்ந்தது - வாயால் கூறியதையும்; நிகழ்த்தலுற்றாம் - சொல்லத்தொடங்குவோம்.
இராமபிரான் சிறப்புகள் அனைவரையும் ஈர்க்க வல்லனவாதலின், பற்றற்ற முனிவர்களும் அவன் முடிசூட்டிக்கொள்வதைக் காண விருப்பம் கொண்டு வந்தனர் என்பதாம். நிகழ்ந்தது - நிகழ்த்தியது; பிறவினை விகுதி மறைந்துள்ளது. இதனை அந்தர்ப்பாவிதணிச் என்பர் வடநூலார். கண்டார், காணார் - முற்றெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thus all the women crowded round in rows, crying out;
- the sages, and the old men and the young of that ancient city,
- beheld his form and could find no bound to their love;
- what they thought in their hearts and what they said aloud, we now begin to tell.
What the poem says
While the women throng around Irāmaṉ, the sages, who are free of all worldly attachment, and the old and young men of the ancient city also gaze at him with boundless love.
Even ascetics have come, drawn by his virtues, to see him crowned. The poet announces that he will now report what all these people felt and said, which the next verses do.