கம்பராமாயணம் 1660 · அயோத்தியா 3.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“உயர் அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை - மிகுந்த கருணை நிறைந்த ஒளிபடைத்த இவன் கண்களைப் போன்ற தாமரை மலரும்; நிறத்தை ஒக்கும் புயல்பொழி மேகம் - திருமேனியின் நிறத்தைப் போன்ற நீரைப் பொழியும் கார் மேகமும்; என்ன புண்ணியம் செய்த” என்பார் - என்ன நல்வினை புரிந்தன என்று கூறுவார் சிலர்; செயல் அருந் தவங்கள் செய்து - பிறரால் செய்வதற்கு முடியாத தவங்களைச் செய்து; இச் செம்மலைத் தந்த - இந்த நம்பியைப் பெற்று (நமக்குக்) கொடுத்த; செல்வத் தயரதற்கு - பேற்றினையுடைய சக்கரவர்த்திக்கு; தக்கது - அவர் செய்த நன்றிக்குத் தக்கதான; என்ன கைம்மாறு யாம் உடையம் - எந்த மறு உதவி உடையராய் இருக்கின்றோம்?; என்பார் - என்று கூறுவர் சிலர்.
இராமன் கண்ணழகிலும் மேனியழகிலும் ஈடுபட்டு அவற்றிற்கு உவமையாகும் தகுதிபெற்ற தாமரையையும், மேகத்தையும் புகழ்ந்தனர் சிலர். இராமனைப் பெற்றுத் தந்த தயரதன் தந்த கொடைக்கு ஈடாக எந்தக் கைம்மாறும் நம்மால் செய்ய இயலாது, நன்றியால் நிறைந்தனர் சிலர். புயல் - நீருக்கு இலக்கணை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The lotus that resembles his bright eyes full of high grace, and the rain-pouring
- cloud that resembles his colour, what merit did they earn?' some say;
- 'What fitting return have we to offer to fortunate Tacarataṉ,
- who performed penances hard to perform and gave us this noble one?' some say.
What the poem says
More remarks from the crowd. Some envy the lotus and the rain cloud, the traditional comparisons for Irāmaṉ's eyes and dark complexion: what good deeds must they have done to earn the honour of resembling him?
Others are filled with gratitude to Tacarataṉ, whose hard penances won him such a son, and wonder how they could ever repay the king for giving Irāmaṉ to them.