கம்பராமாயணம் 1661 · அயோத்தியா 3.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்த நம்பிதன் கருணை - இந்தக் குணங்களால் நிறைந்தவனாகிய இராமபிரானது திருவருள்; வாரணம் அரற்ற வந்து - முதலை வாய்ப்பட்ட கசேந்திரன் என்னும் யானை ஆதிமூலமே என்று கதற அங்குத் தோன்றி; கரா உயிர் மாற்றும் - முதலையின் உயிரைப் போக்கிய; நேமி நாரணன் (கருணை) ஒக்கும் - சக்கரப் படையையுடைய திருமாலின் திருவருளை ஒத்ததாகும்; என்பார் - என்று கூறுவர் சிலர்; ஆரணம் அறிதல் தேற்றா - மறைகளும் இனையன் என்று அறிய இயலாத; ஐயனை அணுகி நோக்கி - (திருமாலாகிய) இராமபிரானை நெருங்கி நன்கு பார்த்து; காரணம் இன்றியேயும் - (அன்பு தவிர வேறு) காரணம் இல்லாமலே; கண்கள் நீர் கலுழ நிற்பார் - கண்களிலிருந்து நீர் சொரிய நிற்பார் சிலர்.
நாரணன் - நாராயணன் என்பதன் சிதைவு. நாரணன் என்பதன் பின்னும் கருணை என்பதனைப் பிரித்துக் கூட்டுக. காரணமின்றிக் கண்ணீர் சொரிந்தனர் என்பது அவர்களது பரவசநிலையினைக் காட்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The compassion of this noble one is like that of Nāraṇaṉ of the discus,
- who came when the elephant cried out and took the crocodile's life,' some say;
- some, drawing near and gazing at the Lord whom the Vedas cannot come to know,
- stand with tears streaming from their eyes for no reason at all.
What the poem says
Some citizens compare Irāmaṉ's kindness to that of Vishnu in a famous story: when the elephant king Kacēntiraṉ, seized by a crocodile, cried out to the Primal Lord, Vishnu came at once and killed the crocodile with his discus.
Others simply gaze at Irāmaṉ, whom even the Vedas cannot fully know, and find tears streaming from their eyes for no reason but love. The commentary reads these tears as a sign of rapture.