கம்பராமாயணம் 1662 · அயோத்தியா 3.95

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீல மா முகில் அனான்தன் - கரிய பெரிய மேகத்தைப் போன்ற இராமபிரானது; நிறையினோடு அறிவு நிற்க - நிறையும் பேரறிவும் ஒருபுறம் இருக்க; சீலம் ஆர்க்கு உண்டு - அவனது நீர்மைக்குணம் வேறு எவருக்கு உண்டு? (ஒருவர்க்கும் இல்லை); இம் முன்பன் - இந்த முன்னவனாகிய இராமபிரான்; தேவரின் அடங்குவானோ - தேவர்களுள் ஒருவனாய் அமைவானோ? (அமையான்); காலமாக் கணிக்கும் - கால அளவாகக் கணக்கிடப்படுகின்ற; நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற - நுட்பமாகிய எண்களையும் கடந்து அப்பால் நின்ற; மூலம் ஆய் - முதற்பொருளாகி; முடிவிலாத மூர்த்தி - அழிவில்லாத பரம்பொருள் ஆவான்; கெட்டேன் - (இதனை உணராமல் இது காறும்) கெட்டேன்; என்பார் - என்று சொல்வர் சிலர்.

இராமனுடைய நிறையும் அறிவும் அல்லாமல், நீர்மையே அவனைப் பரம் பொருள் என்பதனைக் காட்டிக்கொடுக்கிறது. ‘அதனை அறியாமல் நாளைப் பழுதே போக்கினேனே’ என்று தனித்தனியே தன்னிரக்கம் கொண்டனர் சிலர்.

நிறை - தன் நெஞ்சைத் தடுத்து நிறுத்தும் திறன். சீலம் - உயர்ந்தார், தாழ்ந்தார் என்னும் வேறுபாடின்றி நீரோடு நீர் கலந்தாற்போல இரண்டறக் கலந்து பழகுதல். இப்பாட்டின் பின்னிரண்டு அடிகளின் கருத்துப் பின்னும் ‘மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய, காலமும் கணக்கும் நீத்த காரணன்’ (1584) என இடம் பெறுதல் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Leaving aside the self-command and wisdom of him who is like a great dark-blue cloud,
  2. who else has such gentle goodness? Alas for me! Is he to be counted among the gods?
  3. He is the Form without end, the Root, standing beyond even the subtle reckoning
  4. by which time is measured, this Ancient One!' some say.

What the poem says

Some onlookers are moved to a theological realisation. Irāmaṉ's self-control and wisdom are great, but it is his gracious simplicity, the way he mixes with high and low alike 'as water blends with water', that reveals who he is.

He cannot be counted as merely one of the gods; he is the endless First Cause, beyond all measurement of time. 'Alas for me!' they cry, regretting the days they wasted without knowing it. The poet expresses the same idea of Irāmaṉ as beyond time later in the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīla mā mukil aṉāṉtaṉ niṟaiyiṉōṭu aṟivum niṟka,
cīlam ārkku uṇṭu? keṭṭēṉ! tēvariṉ aṭaṅkuvāṉō?
kālamāk kaṇikkum nuṇmaik kaṇakkaiyum kaṭantu niṉṟa
mūlam āy, muṭivu ilāta mūrtti im muṉpaṉ!' eṉpār.