கம்பராமாயணம் 1663 · அயோத்தியா 3.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆர்கலி அகழ்ந்தோர் - கடலைத் தோண்டியவரும்; கங்கை அவனியில் கொணர்ந்தோர் - ஆகாய கங்கையை உலகத்திற்குக் கொண்டுவந்தவரும்; முந்தை - பழமையாகிய; போர் கெழு புலவர்க்கு ஆகி - (அசுரரோடு) போர்மிக்க தேவர்களுக்குத் துணையாகி; அசுரரைப் பொருது வென்றோர் - அசுரர்களைப் போரிட்டு வெற்றிபெற்றவரும் (ஆகிய இக் குலத்து முன்னோர் பலருக்கும்); பேர் கெழு சிறப்பின் வந்த - விளங்குகின்ற மேன்மையோடு உண்டாகிய; பெரும் புகழ் நிற்பது - மிக்க கீர்த்தி நிலைத்து நிற்பது; ஐயன் தார் கெழு - இராமபிரானது வெற்றிமாலை பொருந்திய; திரள்தோள் தந்த புகழினை - திரண்ட தோள்கள் உண்டாக்கிய கீர்த்தியை; தழுவி - தழுவியே யாம்; என்பார்.
ஆர்கலி அகழ்ந்தவர் சகரர்; கங்கை தந்தோன் - பகீரதன்; அசுரரை வென்றோர் - ககுத்தன், முசுகுந்தன் முதலியோர். ஐயன் திரள் தோள்களுக்குத் தாடகைவதம், சிவனது வில்லை முறித்தது, பரசுராமனை அடக்கியது ஆகியவற்றால் புகழ் உண்டாயிற்று. புலவர் - அறிவினையுடைய தேவர்கள். அசுரர் - சுரர்க்குப் பகைவர். சுரர் - தேவர்; அமுதத்தை (சுராவை) உண்டவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Those who dug out the ocean, he who brought the Gaṅgā down to earth, and those who of old
- took the side of the warring gods and fought and conquered the demons:
- the great fame that came to them with its shining glory endures
- only by clinging to the fame won by the Lord's garlanded, massive shoulders,' some say.
What the poem says
Others say that the great ancestors of Irāmaṉ's Solar line owe their lasting fame to him. These include the sons of Cakaraṉ, who dug out the ocean; Pakīrataṉ, who brought the heavenly Gaṅgā down to earth; and kings such as Kakuttaṉ and Mucukuntaṉ, who fought the demons for the gods.
Their glory survives only by clinging to the greater glory of Irāmaṉ's own deeds: killing the demoness Tāṭakai, breaking Śiva's bow, and humbling Paracurāmaṉ.