கம்பராமாயணம் 1664 · அயோத்தியா 3.97

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மைந்த - வீரனே!; இவை சந்தம் - இவை சந்தனக் கலவைகள்; இவை தாஇல் மணி ஆரம் - இவை குற்றமில்லாத இரத்தின மாலைகள்; இங்கு இவை - இவ்விடத்திலுள்ள இவை; சிந்துரமும் - திலகமும்; யாவும் - மற்றை எல்லா அணிகளும் ஆகும்; செறிந்த மதவேழப் பந்திகள் - பொருந்திய மதயானை வரிசைகள்; வயப் பரி - வெற்றியையுடைய குதிரைகள்; பசும் பொனின் வெறுக்கை - பசும்பொன்னாலாகிய செல்வங்கள்; வறியோர் கொள - (இவற்றையெல்லாம்) பொருளில்லாத ஏழைகள் பெற்றுக்கொள்ளும்படி; வழக்கு - (உன்கையால்) எடுத்துக் கொடு; என நிரைப்பார் - என்று வரிசையாகக் கொண்டுவந்து வைப்பவர் சிலர்.

இராமனுக்கு முடிசூட்டுவிழா நிகழும் காலத்தில் அவனுக்கு நன்மை விளைய வேண்டும் என்று கருதிய சிலர் தம்முடைய பொருளான சந்தனம் முதலியவற்றை அவன் கையில் கொடுத்து வறியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டினர். வழங்குதல் - வரம்பு இல்லாமல் கொடுத்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'These are sandal pastes; these are flawless jewelled necklaces; all these,
  2. and the vermilion here; these are the close-ranked rows of rutting elephants,
  3. the mighty horses, the wealth of fresh gold;
  4. Son, give them away for the poor to take!' they say, setting them out in rows.

What the poem says

In a new short metre, the poet shows people bringing their own possessions to Irāmaṉ: sandal paste, jewelled necklaces, vermilion, elephants, horses and gold.

They lay them out in rows and ask him to give them away to the poor with his own hand, so that the merit of the gift will bring him blessing on his coronation day.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cantam ivai, tā ilmaṇi āram ivai yāvum,
cinturamum, iṅku ivai ceṟinta mata vēḻam
pantikaḷ, vayap pari, pacum poṉiṉ veṟukkai,
mainta! vaṟiyōr koḷa vaḻakku!' eṉa niraippār.