கம்பராமாயணம் 1665 · அயோத்தியா 3.98

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில் ,
தன் பொரு இல் கன்று தனி தாவி வரல் கண்டு , ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமாபோல்
என்பு உருகி நெஞ்சு உருகி நஞ்சு உருகி நிற்பார் .

பொருள் · Meaning in Tamil

வீரன் - வீரனாகிய இராமன்; மின் பொருவு தேரின்மிசை - மின்னலையொத்த தேரின்மீது ஏறிவரும்போது; ஆ - பசுவானது; தன் பொருவு இல் கன்று - தனது ஒப்பற்ற கன்று; தனி தாவி வரல் கண்டாங்கு - தனியே துள்ளிக் குதித்து வருதலைப் பார்த்தபோது; அன்பு உருகு சிந்தையொடும் - அன்பினால் கரைகின்ற மனத்தோடு; உருகுமா போல் - உருகும் வகைபோல; என்பு உருகி - உடம்பு நெகிழ்ந்து; நெஞ்சு உருகி - மனம் உருகி (நிற்பதன்றி); உருககில்லார் யார் - உருகாமல் வன்மையோடு நின்றவர் யார்? (எவரும் இலர்).

இராமனைக் கண்ட எல்லாரும் தம்மையறியாமலே அவன்மீது அன்பு தோன்றி உள்ளமும் உடலும் உருகி நிற்பர் என்றவாறு. கண்டாங்கு - தொகுத்தல் விகாரம், அகரம் தொக்கது. உருகுமா போல் - உருகுமாறு போல; ஆ - ஆறு என்பதன் விகாரம். பின்னிரண்டு அடிகளில் உருகுதல் என்ற சொல் பலமுறை ஒரே பொருளில் வந்தது; சொற்பொருட் பின்வருநிலை அணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the hero came riding on the chariot that rivals lightning,
  2. as a cow, seeing her matchless calf come leaping along alone,
  3. melts with a heart that melts in love,
  4. who did not melt, their very bones melting, their hearts melting?

What the poem says

As Irāmaṉ rides by in his flashing chariot, everyone who sees him melts with love, body and heart alike, the way a cow melts with tenderness when she sees her own calf come bounding toward her.

The verb 'melt' is repeated again and again with the same meaning, a figure of repetition, to show that no one was untouched.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1miṉ poruvu tēriṉmicai vīraṉ varu pōḻtil,
taṉ poruvu il kaṉṟu taṉi tāvi varal kaṇṭāṅku
aṉpu uruku cintaiyoṭum ā urukumāpōl
eṉpu uruka neñcu uruka yār urukakillār?