கம்பராமாயணம் 1666 · அயோத்தியா 3.99

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நல்லோர் - நற்பண்புடையவர்; சத்திரம் நிழற்ற - வெண்கொற்றக்குடை நிழலைச் செய்யவும்; நிமிர் தானையொடு - பெருகிய சேனையுடன்; நானா அத்திரம் நிழற்ற - பல்வகைப் படைகளும் ஒளிவீசவும்; அருளோடு அவனி ஆள்வார் - அருளுடன் பூமியை ஆளும் அரசர்கள்; இனி - இராமபிரான் பிறந்த பின்பு; புத்திரர் பெறுதல் புல்லிது - மைந்தர்களைப் பெறுவது சிறுமையுடையது; என - என்று சொல்லி; திகைத்து - திகைத்தும்; உருகி - மனம் உருகியும்; சித்திரம் என நிற்பார் - ஓவியம்போல் அசைவற்று நிற்பர்.

இராமனைப் போன்ற பிள்ளையை இனி எவரும் பெறல் அரிது என்பது கருத்து. அத்திரங்கள் எய்வன, எறிவன, குத்துவன, வெட்டுவன எனப் பல வகைப்படுதலால் ‘நானா அத்திரம்’ என்றார். நிழல் - சாயை, ஒளி என்னும் இருபொருள் தருவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For those who rule the earth with grace, with the royal umbrella casting shade, with a towering army,
  2. and with weapons of many kinds casting their gleam,
  3. to beget sons from now on is a paltry thing,' say the good,
  4. and stand alone like painted figures, dazed and melting.

What the poem says

Good people in the crowd remark that, now that Irāmaṉ has been born, it is a small thing for any other king, however mighty and righteous, to have sons: no one will ever have a son to equal him.

They stand stock-still like figures in a painting, overwhelmed. The word for 'casting shade' also means 'casting light', so the umbrella shades while the weapons gleam.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cattiram niḻaṟṟa nimir tāṉaiyoṭu nāṉā
attiram niḻaṟṟa aruḷōṭu avaṉi āḷvār,
puttirar iṉip peṟutal pullitu;' eṉa nallōr,
cittiram eṉat taṉi tikaittu uruki niṟpār.