கம்பராமாயணம் 1668 · அயோத்தியா 3.101

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தாய் கையில் வளர்ந்திலன் ; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை ; கிளர் ஞாலம் இவன் ஆள ,
ஈகையில் உவந்த அவ் இயற்கை இது ; என்றால் ,
தோகை இவள் பேர் உவகை சொல்லல் அரிது ! ' என்பார் .

பொருள் · Meaning in Tamil

தாய் கையில் வளர்ந்திலன் - இராமபிரான் ஈன்ற தாயாகிய கோசலையின் கையில் வளர்ந்தானில்லை; வளர்ந்தது - அவனை வளர்த்தது; தவத்தால் கேகயன் மடந்தை - முன்செய்த தவப்பயனால் கேகயமன்னன் மகளாகிய கைகேயி; கிளர் ஞாலம் இவன் ஆள - (அதனால்) விளங்குகின்ற நாட்டினை இவ் இராமன் ஆள; ஈகையில் உவந்த - கொடுப்பதில் (பெற்ற தாய்போல) மகிழ்ச்சியுற்ற; அவ் இயற்கை இது என்றால் - (அவளது) தன்மை இதுவாயின்; தோகை அவள் பேர் உவகை - அக் கைகேயியினது பெருங்களிப்பு; சொல்லல் அரிது - சொல்லுதல் முடியாது; என்பார் - என்று கூறுவார்கள்.

இராமனை வளர்த்தவள் கைகேயியாதலின் அவளுக்கே மிக்க மகிழ்ச்சி உண்டு என்றனர் சிலர். அவள் இந்நாள் வரை இராமனிடம் பேரன்பு கொண்டவளாய் இருந்தமையை அனைவரும் அறிவராதலின் இவ்வாறு கூறினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He did not grow up in his own mother's arms; it was the daughter of the Kēkaya king
  2. who, by her penance, raised him; if she rejoiced, like his mother, to give
  3. the shining world for him to rule, if that is her nature,
  4. then the great joy of that peacock-like lady is beyond telling,' they say.

What the poem says

People recall that Irāmaṉ was brought up not by his own mother Kōcalai but by Kaikēyi, who has always loved him dearly.

So they imagine that she, of all people, must be rejoicing most of all to see the kingdom given to him. The irony is crushing: at this very moment Kaikēyi has used her boons to take the kingdom from Irāmaṉ and send him into exile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāy kaiyil vaḷarntilaṉ; vaḷarttatu tavattāl
kēkayaṉ maṭantai; kiḷar ñālam ivaṉ āḷa,
īkaiyil uvanta av iyaṟkai itu; eṉṟāl,
tōkai avaḷ pēr uvakai collal aritu!' eṉpār.