கம்பராமாயணம் 1669 · அயோத்தியா 3.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாவமும் அருந் துயரும் - இவன் ஆளப்போவதால் தீ வினைகளும் தீர்த்தற்கரிய துன்பங்களும்; வேர் பறியும் என்பார் - அடியோடு அழியும் என்பார்; பூவலயம் - இந்தப் பூமண்டலம்; இன்று தனி அன்று - இப்பொழுது இராமன் ஒருவனுக்கே தனியுரிமை உடையது அன்று; பொது என்பார் - எல்லார்க்கும் பொதுவுடைமை ஆகும் என்பார்; தேவர் பகை உள்ளன - தேவர்களுக்குப் பகையாய் உள்ள அரக்கர் கூட்டங்களை; இவ் வள்ளல் தெறும் என்பார் - இவ் இராமன் அழிப்பான் என்பார்; ஏவல் செயும் மன்னர் - இவனுக்கு ஏவல் செய்யும் அரசர்களது; தவம் யாவது கொல் என்பார் - நல்வினை எத்தன்மையதோ என்பார்.
இராமன் ஆட்சியில் தம் பாவமும் துயரும் தீரும் என்றார் சிலர். இராமன் மக்கள் குறைகளைக் கேட்டறிந்து, அவர்கள் தாமே ஆட்சிபுரிந்தால் எவ்வாறு நன்மையைப் பெறலாமோ அவ்வாறு நன்மையைப் பெறச்செய்வான் என்னும் உறுதிப்பாட்டால் ‘பூவலயம் இன்று தனி அன்று; பொது’ என்றார் சிலர். இராமன் ஆளும்போது தாங்களே ஆளுவதாகக் கருதினர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Sin and grievous sorrow will be torn out by the roots!' some say;
- 'From today the world is no one's own; it belongs to all!' some say;
- 'This bountiful one will destroy all who are enemies of the gods!' some say;
- 'What penance must the kings have done who will serve him?' some say.
What the poem says
More voices from the crowd. Some expect Irāmaṉ's reign to root out sin and suffering. Others say that from now on the earth will belong to everyone in common, because Irāmaṉ will rule so attentively to the people's needs that they will feel they are ruling themselves.
Others predict that he will destroy the demons who trouble the gods, and envy the good fortune of the kings who will serve under him.