கம்பராமாயணம் 1670 · அயோத்தியா 3.103
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்டு - (நகரமக்கள் வீதியாகிய) அவ்விடத்து; இனையராய் - இத்தன்மையராக; இனைய கூற - இத்தன்மையனவற்றைச் சொல்லிக்கொண்டிருக்க; அடல்வீரன் - வெற்றி வீரனாகிய இராமபிரான்; தூண்டு புரவி - (சுமந்திரனால்) செலுத்தப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட; பொரு இல் சுந்தர மணித் தேர் - ஒப்பற்ற அழகிய மணிகள் கட்டிய தேரில்; நீண்ட கொடி மாட நிரை வீதி - உயர்ந்த கொடிகளையுடைய மாளிகை வரிசையினையுடைய தெரு; நிறையப் போய் - நிறைவாக விளங்கும்படி சென்று; புகழ்பூண்ட மன்னன் உறை கோயில் - புகழை ஆபரணமாக அணிந்துள்ள தயரதன் தங்குகின்ற அரண்மனையை; புகலோடும் - அடைந்த அளவில்.
இனையர் இனைய - குறிப்பு வினையாலணையும் பெயர். புகலோடும் - உம்மீற்று வினையெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While the people there spoke such things, the victorious hero,
- in the peerless, beautiful jewelled chariot drawn by spurred horses,
- went on, filling the street lined with mansions with long flags,
- and as soon as he entered the palace where dwelt the king who wore fame as his ornament,
What the poem says
While the crowds talk among themselves, Irāmaṉ's beautiful jewelled chariot, driven by Cumantiraṉ, moves down the flag-lined street and reaches the palace where Tacarataṉ is.
The sentence is left unfinished at the moment of arrival; the next verse tells what Irāmaṉ finds, or rather fails to find, when he enters.