கம்பராமாயணம் 1672 · அயோத்தியா 3.105
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓத்து அவை - மறைகளையும்; உலகத்து எங்கும் உள்ளவை - உலகு எங்கும் இருக்கும் அறிவு நூல்களையும்; உணர்ந்தார் உள்ளம் பூத்தவை - நன்கு உணர்ந்த ஞானிகளின் நெஞ்சத்தில் தோன்றுவனவாகிய; இராமபிரான்; வேத்தவை - அரசர் கூட்டம்; முனிவரோடு - முனிவர்களுடனே கூடி; விருப்பொடு களிக்கும் - அன்புடன் மகிழ்கின்ற; மெய்ம்மை ஏத்து அவை இசைக்கும் - உண்மையான கீர்த்திகளைப் பாடுகின்ற; செம் பொன் மண்டபம் - சிறந்த பொன்னால் ஆகிய மண்டபத்தினுள்ளே; இனிதின் எய்தான் - இனிமையாகப் புகாதவனாகி; சிற்றவை கோயில் புக்கான் - சிறிய தாயாகிய கைகேயியினுடைய மாளிகையில் புகுந்தான்.
அரசரும் முனிவரும் தன் கீர்த்தியைப் பாடிக்கொண்டிருக்கும் விழாமண்டபத்தில் நுழையாமல் இராமன் கைகேயியின் மாளிகையில் புகுந்தான். உலகத்து எங்கும் உள்ளவை - ஆறு அங்கங்கள், மீமாம்சை, புராணங்கள், தரும சாத்திரங்கள் முதலியன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Without going straight into the hall of red gold where the assembly of kings with the sages
- rejoiced in love and sang praises of truth,
- he who resembles the form that blossoms in the hearts of those who have mastered the Vedas and all the learning in the world
- entered the palace of his younger mother.
What the poem says
Instead of entering the golden coronation hall, where the kings and sages are joyfully singing his praises, Irāmaṉ goes directly to the palace of Kaikēyi, his stepmother, where he has been summoned.
He is described as the very form that the wise, who have mastered the Vedas and every branch of learning, behold in meditation: the Supreme Being in human shape.