கம்பராமாயணம் 1673 · அயோத்தியா 3.106

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புக்கவன் தன்னை நோக்கிப் புரவலர் , முனிவர் யாரும்
'தக்கதே நினைந்தான் ; தாதை தாமரைச் சரணம் சூடித்
திக்கினை நிமிர்த்த கோல் அச் செல்வனே செம் பொன் சோதி
மிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது ' என்றார் .

பொருள் · Meaning in Tamil

புரவலர் முனிவர் யாரும் - அரசர்களும், முனிவர்களும் மற்றுள்ள எல்லோரும்; புக்கவன் தன்னை நோக்கி - கைகேயியின் மாளிகையில் புகுந்த இராமபிரானைக் கண்டு; “தக்கதே நினைந்தான் - இராமன் தகுதியான செயலையே எண்ணினான்; தாதை தாமரைச் சரணம் சூடி - தன் தந்தையின் தாமரை மலர் போலும் திருவடிகளை முன்னதாக வணங்கி; திக்கினில் நிமிர்ந்த கோலச் செங்கதிர் - எல்லாத் திசைகளிலும் உயர்ந்து தோன்றுகின்ற வடிவுபடைத்த செந்நிறக் கதிர்களைச் செல்வமாக உடைய சூரியன் தொடங்கி; ஏய்ந்த மிக்குஉயர் மகுடம் - அணிந்த மிக உயர்ந்த கிரீடத்தை; சூட்ட - நூல்முறைப்படி அணிவிக்க; சூடுதல் விழுமிது” என்றார் - தான் அணிந்துகொள்வது சிறந்தது என்றார்.

விழா மண்டபத்தில் இருந்தோர் முடிசூடுவதற்கு முன்னே இராமன் தந்தையை வணங்கி வாழ்த்துப் பெறப்போகிறான் என்று கருதி அவனைப் பாராட்டினர். தாமரைச் சரணம் - உவமத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing him enter there, the kings, the sages and all said:
  2. 'He has thought of the right thing; to bow first at his father's lotus feet,
  3. and then to be crowned with the very high crown worn by the line that began with the lovely red-rayed Lord
  4. who rose over every quarter, as it is bestowed, that is excellent.'

What the poem says

The assembled kings and sages see Irāmaṉ go into Kaikēyi's palace and approve. They assume he is going first to bow at his father's feet and receive his blessing before being crowned.

The crown he is to wear is the ancient crown of the Solar dynasty, which traces its descent from the Sun. None of them suspects what awaits him inside.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukkavaṉ taṉṉai nōkkip puravalar, muṉivar yārum
'takkatē niṉaintāṉ; tātai tāmaraic caraṇam cūṭi
tikkiṉai nimirnta kōlac ceṅkatirc celvaṉ ēynta
mikku uyar makuṭam cūṭṭac cūṭutal viḻumitu' eṉṟār.