கம்பராமாயணம் 1675 · அயோத்தியா 3.108

Section அயோத்தியா காண்டம் / 3. கைகேயி சூழ்வினைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வந்தவள் தன்னைச் சென்னி மண் உற வணங்கி , வாய்த்த
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையில் புதைத்து , மற்றைச்
சுந்தரத் தட கை தானை மடக்கு உற , துவண்டு நின்றான் ;
அந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான் .

பொருள் · Meaning in Tamil

அந்தி வந்து அடைந்த - மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த; தாயைக் கண்ட ஆன்கன்று அன்னான் - தாய்ப்பசுவைக் கண்ட பசுவின் கன்றைப் போன்ற இராமபிரான்; வந்தவள் தன்னை - தன் முன்னே வந்த அக்கைகேயியை; சென்னி மண் உற வணங்கி - நெற்றி தரையில் பொருந்த விழுந்து வணங்கி; வாசச் சிந்துரப் பவளச் செவ்வாய் - மணம் வீசுவதும் சிந்தூரத்தையும் பவளத்தையும் போன்ற சிவந்த வாயை; செங் கையின் புதைத்து - சிவந்த (வலக்) கையால் பொத்திக்கொண்டு; மற்றைச் சுந்தரத் தடக் கை - மற்றொன்றாகிய அழகு பொருந்திய பெரிய இடக் கையானது; தானை மடக்குற - ஆடையை மடக்கிக்கொள்ள; துவண்டு நின்றான் - வணங்கி நின்றான்.

இப்பாட்டு இராமபிரானுடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அடக்கம் என்பது உயர்ந்தோர்முன் பணிந்த மொழியும், தணிந்த நடையும், தானை மடக்கலும், வாய் புதைத்தலும், தலைதாழ்த்தி நிற்றலும் கொண்டு அடங்கியொழுகுதலாம். இராமபிரான் அடக்கத்திற்கு விளக்கம் தருவதுபோல நிற்றல் போற்றி மகிழத்தக்கது. சென்னி ஈண்டு இலக்கணையாய் நெற்றியைக் குறித்தது. இன் உருபுபொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing to her who had come, his head touching the ground, and covering with his red hand
  2. his fragrant mouth, red as vermilion and coral, while his other
  3. lovely large hand folded in his garment, he stood bent in humility,
  4. like a calf that sees its mother come home at dusk.

What the poem says

Irāmaṉ prostrates himself before Kaikēyi with his forehead on the ground. Then he stands in the traditional posture of respect before an elder: one hand covering his mouth, the other gathering in the folds of his garment, his body bowed.

The commentary lists the marks of such humility: gentle speech, a subdued gait, gathered clothing, a covered mouth and a lowered head. Irāmaṉ comes to her as eagerly and trustingly as a calf running to its mother when she returns from pasture in the evening.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantavaḷ taṉṉaic ceṉṉi maṇ uṟa vaṇaṅki vācac
cinturap pavaḷac cevvāy ceṅkaiyiṉ putaittu, maṟṟaic
cuntarat taṭak kai tāṉai maṭakkuṟat tuvaṇṭu niṉṟāṉ;
anti vantu aṭainta tāyaik kaṇṭa āṉ kaṉṟiṉ aṉṉāṉ.