கம்பராமாயணம் 1680 · அயோத்தியா 3.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெருள் உடை மனத்து - தெளிவு பொருந்திய நெஞ்சினையுடைய; மன்னன் ஏவலின் திறம்பல் அஞ்சி - தயரத மன்னனின் கட்டளையிலிருந்து மாறுபடுவதற்குப் பயந்து; இருள்உடை உலகம் தாங்கும் - துன்ப இருள் நிறைந்த உலகத்தைத் தாங்குகின்ற; இன்னலுக்கு இயைந்து நின்றான் - துன்பத்திற்கு ஒருப்பட்டு நின்றவனாகிய இராமன்; உருள் உடைச் சகடம் பூண்ட - சக்கரத்தையுடைய வண்டியில் பூட்டப்பட்ட; உடையவன் உய்த்த கார் ஏறு - உடையவனாலே செலுத்தப்பட்ட கரிய காளையானது; அருள் உடை ஒருவன் நீக்க - கருணையையுடைய ஒருவன் வண்டியிற் பூட்டிய பூட்டினை அவிழ்த்து விட; அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான் - அப் பிணிப்பிலிருந்து விடுபட்டதைப் போல ஆனான்.
அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற் பூட்டிய காளையாகவும் கூறுதல் மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம் நீங்கி இருந்தனன் என்றவாறு. இஃது உவமை அணி. சகடம் - அரசாட்சி; உடையவன் - தயரதன்; கார் ஏறு - இராமன். இருள் - இடத்து நிகழ் பொருளின் தன்மை இடத்தின்மேல் ஏற்றி உரைக்கப்பட்டது. நின்றான் - வினையாலணையும் பெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who, fearing to swerve from the command of the king of clear mind,
- had consented to the toil of bearing the burden of this dark world,
- was like a black bull, yoked to a wheeled cart and driven by its owner,
- when a kindly person unties it and it is freed from that bond.
What the poem says
Irāmaṉ had agreed to be crowned only because his father ordered it. He accepted the heavy load of ruling a troubled world out of obedience, not desire.
Now that the order has changed, he feels like a dark bull yoked to a cart by its master, when some kind person unties the yoke and sets it free. Kingship is traditionally pictured as a cart and the king as the bullock pulling it; the 'owner' here is Tacarataṉ and the bull is Irāmaṉ.