கம்பராமாயணம் 1684 · அயோத்தியா 4.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மௌலி புனைந்திலன் - மகுடம் சூடவில்லை; குஞ்சி - தலைமுடி; மஞ்சனம் புனித நீரால் நனைந்திலன் - அபிடேகமாகிய தூய நதிகளின் தண்ணீரால் நனையப்பெற்றான் இல்லை; என்கொல்?” - என்ன காரணம்; என்னும் ஐயத்தாள் - என்கின்ற சந்தேகத்தை உடையவளாக இருக்கின்ற கோசலைத்தாயின்; நளின பாதம் - தாமரையாகிய அடிகளை; வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும் - பொன்னாற் செய்யப்பெற்ற வீரக்கழல் அணிந்த இராமன் வணங்கிய அளவில்; குழைந்து வாழ்த்தி - மனம் உருகி ஆசி கூறி; “நினைந்தது என்?” - சக்கரவர்த்தி எண்ணிய செயல் என்னாயிற்று; நெடுமுடி புனைதற்கு இடையூறு உண்டோ? - உயர்ந்த மகுடத்தைச் சூடுதற்கு ஏதேனும் தடை உளதோ;” என்றாள் - என்று கேட்டாள்.
குஞ்சி - ஆடவர் தலைமுடி. மகனை ட்டது வாழ்த்தினாள், பின்னர் வினவினாள் என்பது அறியற்பாலது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He has not put on the crown! His hair is not wet with the holy water
- of the consecration! Why?' she wondered; and when the hero whose feet bear golden anklets
- bowed at her lotus feet, melting, she blessed him and said:
- 'What became of the plan? Is there some obstacle to your wearing the high crown?'
What the poem says
Kōcalai notices at once that something is wrong: Irāmaṉ wears no crown, and his hair is not wet from the sacred waters of the consecration bath.
When he bows at her feet, her first act is to bless him with melting love; only then does she ask what has happened to the king's plan, and whether something has got in the way of his crowning.