கம்பராமாயணம் 1688 · அயோத்தியா 4.6

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாய் உரைத்த சொல் கேட்டு - தாயாகிய கோசலை கூறிய சொற்களைக் கேட்டு; தழைக்கின்ற - மகிழ்ச்சி அடைகின்ற; தூய சிந்தை - தூய்மையான மனம் உடைய; அத் தோம் இல் குணத்தினான் - அந்தக் குற்றம் இல்லாத குணத்தை உடைய இராமன்; (அவளை நோக்கி) “நாயகன் - தயரதச் சக்கரவர்த்தி; எனை நல்நெறி உய்ப்பதற்கு - என்னை நல்ல வழியில் செலுத்துவதற்கு; ஏயது - ஏவிய; ஓர் பணி உண்டு” - ஒரு கட்டளை உள்ளது; என்று இயம்பினான் - என்று சொன்னான்.

கானகம் ஏகச் சொன்னான் என்று முதலிற் கூறாமல் ‘நன்னெறி உய்ப்பதற்கு’ என்று கூறியது தாயின் மனத்தைத் திடப்படுத்தக் கூறியதாக அமைந்து அழகு செய்கிறது. இங்கும் தந்தை என்னாமல் ‘சக்கரவர்த்தி’ என்னும் பொருளில் ‘நாயகன்’ என்றது காண்க. பரதனைப் பற்றிக் கோசலை கூறிய சொற்கள் இராமனை மகிழ்ச்சியில் ஆழ்த்தின என்பது இராமனின் குண அழகை மேலும் ஒளிவிடச் செய்வதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Hearing the words his mother spoke,
  2. he of pure, flourishing heart and flawless virtue
  3. said: 'Our lord has given me one task,
  4. to lead me on the good path.'

What the poem says

Irāmaṉ is delighted by his mother's generous words about Paratan, which shows his own goodness. He now has to tell her the harder news.

He does not say outright that he has been ordered into the forest. Instead he says that the king has given him a task to set him on the righteous path, preparing her gently. Like her, he speaks of 'our lord' the king rather than 'father'.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāy uraitta col kēṭṭut, taḻaikkiṉṟa
tūya cintai at tōm il kuṇattiṉāṉ,
`'nāyakaṉ eṉai nal neṟi uyppataṟku
ēyatu uṇṭu or paṇi'' eṉṟu iyampiṉāṉ.