கம்பராமாயணம் 1689 · அயோத்தியா 4.7

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஈண்டு உரைத்த பணி என்னை ? ' என்றவட்கு
`'ஆண்டு ஒர் ஏழினொடு ஏழ் அகன் கான் இடை
மாண்ட மா தவர் ஓடு உடன் வைகிப் பின்
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் '' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“ஈண்டு - இவ்விடத்தில்; உரைத்த - (சக்கரவர்த்தி உனக்குச்) சொல்லிய; பணி என்னை - கட்டளை யாது;” என்றவட்கு - என்று கேட்ட கோசலைக்கு; ஓர் ஏழினோடு ஏழ் ஆண்டு - ஒரு பதினான்கு ஆண்டுக் காலம்; அகன்கானிடை - அகன்ற காட்டிடத்தில்; மாண்ட - மாட்சிமை பொருந்திய; மாதவத்தோருடன் - முனிவர்களுடன்; வைகி - தங்கி; பின் - பிறகு; நீ மீண்டு வரல் வேண்டும் - நீ திரும்பி வருதல் வேண்டும்; என்றான் - என்று கூறினான்; என்றான்.

கோசலை வருந்தாதிருக்கக் ‘காட்டிற்கு அனுப்பி விட்டான்’ என்று கூறாமல், ‘முனிவர்களுடன் தங்கித் திரும்பிவருதல் வேண்டும்’ என்று நாயகன் பணித்தான் என்ற இராமன் சொல்திறம் போற்றுதற்குரியது. ஈண்டு - முன்னிலையிடத்தின் கண் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To her who asked, 'What is the task he has given you here?',
  2. he said: 'For seven years and seven, in the wide forest,
  3. dwelling with great and noble ascetics, and afterwards
  4. to return: that, he said, is what you must do.'

What the poem says

When Kōcalai asks what the task is, Irāmaṉ tells her: to live for fourteen years in the forest among great ascetics, and then return.

The commentary praises his tact. He does not say 'the king has banished me to the forest', but frames it as an instruction to dwell with holy men and come back, to soften the blow for his mother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'īṇṭu uraitta paṇi eṉṉai?' eṉṟavaṭku
`'āṇṭu or ēḻiṉoṭu ēḻ akaṉ kāṉiṭai
māṇṭa mā tavattōruṭaṉ vaikip piṉ
mīṇṭu nī varal vēṇṭum eṉṟāṉ'' eṉṟāṉ.