கம்பராமாயணம் 1690 · அயோத்தியா 4.8

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆங்கு - அப்பொழுது; அவ் வாசகம் என்னும் அனல் - (இராமன் காடு செல்லவேண்டும் என்று தயரதன் கூறிய) அந்த வார்த்தை என்கிற நெருப்பு; குழை தூங்கு தன் செவியில் தொடராமுனம் - காதணி அசைகின்ற தன்னுடைய காதுகளில் வந்து விழுதற்கு முன்னமே (கோசலை); ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள் - இரங்கி, மெலிந்து, தடுமாறி; மனம் வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் - மனம் வீங்கி, வருந்தி, மயக்கமுற்றுக் கீழே விழுந்தாள்.

‘வாசகம் என்னும் அனல்’ என்பது, ஊர் எனப்படுவது உறையூர் என்றார்போல வாசகத்தின் கொடுமை உணர்த்தி நின்றது. நெருப்புச் சேர்த்தாரைச் சுடும், இவ்வாசகம் சேராமுன்னமே சுடும் தன்மை படைத்தது என்பதாம். தூங்குதல் - தொங்குதல்; காதில் இறுக அணிவது தோடு; தொங்க அணிவது குழை; தொங்கூட்டம் என்று இவ்வணியைக் கூறுவர். அரோ - ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the fire of those words had even reached
  2. her ears, where earrings hung swaying,
  3. she sighed, she grew faint, she was stunned, her heart
  4. swelled, she sobbed, she fell. Alas!

What the poem says

Even before Irāmaṉ's words have fully reached her ears, Kōcalai is struck down. The poet runs six verbs together: she sighs, weakens, is stunned, her heart swells, she sobs, she falls.

The words are called a fire, and a worse one: ordinary fire burns only what it touches, but these words burn even before they arrive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṅku av vācakam eṉṉum aṉal kuḻai
tūṅku taṉ ceviyil toṭarāmuṉam,
ēṅkiṉāḷ, iḷaittāḷ, tikaittāḷ, maṉam,
vīṅkiṉāḷ, vimmiṉāḷ, viḻuntāḷ, arō.