கம்பராமாயணம் 1691 · அயோத்தியா 4.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மகனே! -; உனை ‘மாநிலம் தஞ்சம் ஆக நீ தாங்கு’ என்ற வாசகம் - உன்னை நோக்கி (தசரத சக்கரவர்த்தி) நீ இந்தப் பூமியைப் பற்றுக்கோடாக இருந்து காப்பாற்றுவாயாக என்று சொல்லிய வார்த்தை; வஞ்சமோ? - வஞ்சனையோ?; நஞ்சமோ? - விடம் போலக் கொடியதோ?; நான் இனி உயிர் வாழ்வெனோ? - நான் இனிமேல் உயிர்வாழ மாட்டுவேனோ?; என் ஆர் உயிர் அஞ்சும் அஞ்சும் அஞ்சும் - என் அரிய உயிர் மிகவும் பயப்படும்.”
அரசாளச் சொல்லியிராவிட்டால் காடு போகவும் நேர்ந்திராது என்ற கணிப்பால் கோசலை ‘வாசகம் வஞ்சமோ’ என்றாள். ‘தஞ்சம் இவ் உலகம் நீ தாங்குவாய் என’ இத்தொடர் பரதனை நோக்கி வசிட்டன் கூறியதாகப் பின்னரும் வருதல் (2255) அறிக. முன் இனிதாகிடும் நஞ்சுகூடப் பின் கொல்லும். அதுபோல், ‘அரசாள்க’ என்றது இனிதாகிப் பின்னர்க் ‘காடு ஏகு’ என முடிதலின் ‘நஞ்சமோ’ எனக் கூறினாள். ஆல் - ஈற்றசை. அஞ்சும் என்பது அடுக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Was it a deceit, my son, that word to you,
- "Bear the great earth and be its refuge"?
- Was it poison? Shall I live on now?
- It fears, it fears! My precious life is filled with fear!'
What the poem says
Coming to herself, Kōcalai cries out. Was the king's earlier command, that Irāmaṉ should be the refuge and support of the world, only a trick? If he had never been offered the crown, he would not now be sent away.
That offer was like poison, sweet at first and deadly afterwards. She wonders whether she can go on living, and the repeated 'it fears' conveys her panic.