கம்பராமாயணம் 169 · பால 5.1

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயவன் - (மேலே அரசியல் படலத்தில் கூறிய அப்பெருமையெல்லாம் பொருந்தியவனான) அந்தத் தயரத மன்னன்; ஒருபகல் அயனையே நிகர் தூயமாமுனிவனைத் தொழுது - ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி; தொல்குலத்தாயரும், தந்தையும், தவமும் - பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும் தந்தைமாரும் தவப்பயன்களும்; அன்பினால் மேயவான் கடவுளும் - அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும்; பிறவும் வேறு நீ - மற்றையோரும், வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களேதாம்.

தவம்: புண்ணியமும்ஆம். வான்: உண்மை என்றும் பொருள் கூறலாம். ‘பிறவும் வேறும்’ என்பது இங்குக் கூறப்படாத மற்றஎல்லாம் என்ற பொருள் தந்து நின்றது. வசிட்டரை மன்னன் எப்படி மதித்துள்ளான் என்பது இதனால் புலப்படும். இது குளகம். நான்காம் பாடலின் “என்றுளன்” எனவரும் சொல்லுடன் முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That king, one day, bowing before the pure great sage
  2. who is equal to Ayaṉ himself, said: 'Of my ancient line
  3. the mothers and the fathers, the merit of penance, the high god
  4. I hold in love, and all else, and everything besides — you are all of these to me.'

What the poem says

A new canto begins, on the birth of Irāmaṉ. Tacarataṉ goes to his family priest, the sage Vaciṭṭaṉ, as holy as Brahmā the creator (Ayaṉ), to tell him a trouble on his mind.

He begins by telling the sage that he is everything to him: ancestor, merit and god. The sentence runs on through the next three verses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyavaṉ, oru pakal, ayaṉaiyē nikar
tūya mā muṉivaṉait toḻutu, 'tol kulat
tāyarum, tantaiyum, tavamum, aṉpiṉāl
mēya vāṉ kaṭavuḷum, piṟavum, vēṟum nī.'