கம்பராமாயணம் 170 · பால 5.2

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம் குலத்தலைவர்கள் - எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும்; இரவிதன்னினும் - தமது குல முதல்வனான சூரியனை விடவும்; தம்குலம் விளங்குற - தங்கள் குலம் விளக்க முறும்படியாக; தரணிதாங்கினார் - இவ்வுலகை ஆதரித்துக் காத்தனர்; மங்குநர் இல்என - புகழில் மயங்கியவர்கள் இல்லை என்னுமாறு; வரம்பில் வையகம் - எல்லைகாண இயலாத இவ்வுலகத்தை; இங்கு நின் அருளினால் - இங்கு, இவ்வயோத்தியிலிருந்தே உனது அருளின் உதவியால்; இனிதின் ஓம்பினேன் - இனிமையுறக் காத்து வந்தேன்.

தலைவர்கள்: குடிமக்களுக்குத் தலைமை பூண்டவர்களான அரசர்கள். சூரியன் எங்கும் வெப்பத்தையும், ஒளியையும் பரப்பி, உயிர்களைக் காப்பது போல, சூரிய குலவேந்தர்கள் அச்சூரியனைக்காட்டிலும் சிறப்பாகத் தமது குலத்தை விளங்கச் செய்தனர் என்பது கருத்து. மங்குதல்: அழிதல், குறைதல் என்னும் பொருள் உடையது. இங்கு ‘மங்குநர்’ புகழில் குறைந்தவர் என்னும் பொருளில் வந்தது. தரணி, ‘வையகம்’ இரண்டும் உலகம் என்ற பொருள் உடையன. ‘மங்குநர்’ என்பதிலுள்ள ‘நர்’ பெயர் விகுதி. ‘வையகம்’ வையம் எனவும் வழங்கப்பெறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The lords of my line ruled the earth so that their line
  2. shone brighter even than the Sun,
  3. so that none could say their fame had dimmed; and I, here,
  4. by your grace, have cherished this boundless world in happiness.'

What the poem says

Tacarataṉ reminds the sage of the glory of his dynasty. His ancestors made the solar line shine brighter than the Sun itself, who founded it.

He says modestly that he too has ruled the wide world well, but only by Vaciṭṭaṉ's grace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'em kulat talaivarkaḷ iravitaṉṉiṉum
tam kulam viḷaṅkuṟat taraṇi tāṅkiṉār,
maṅkunar il eṉa; varampu il vaiyakam,
iṅku, niṉ aruḷiṉāl, iṉitiṉ ōmpiṉēṉ.'