கம்பராமாயணம் 171 · பால 5.3

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு, அரோ.'

பொருள் · Meaning in Tamil

அறுபதினாயிரம் ஆண்டும் - (நான் ஆட்சி செய்த) அறுபதினாயிரம் ஆண்டுகளும்; மாண்டு உற - கழிந்து போகும்படி, உறுபகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன் - உற்ற பகைவர்களை ஒடுங்குமாறு செய்து, இவ்வுலகத்தைக் காத்து வந்தேன்; பிறிது ஒரு குறை இலை - (எனக்கு) வேறு ஒரு குறைவும் இல்லை; என்பின் வையகம் - எனது ஆட்சிக்குப் பிறகு இந்த உலகம்; மறுகுவது என்பதோர் - (நல்லாட்சியின்றி) குழப்பமடைய நேரிடும் என்று ஒரு; மறுக்கம் உண்டு - மனக்கலக்கம் (எனக்கு) இருக்கிறது.

‘மாண்டுஉற’ மாட்சி பெற்றுப் பொருந்த என்று கூறுதலும் பொருந்தும். ‘உறுபகை’ என்பதற்கு நேரும்பகை அல்லது மிகுபகை என்றும் பொருள் கொள்ளலாம். உற்றபகை என்பது பொருளானால் வினைத்தொகை. மிக்க பகை என்பது பொருளானால் உரிச்சொல் தொடர். நாட்டை அழிப்பதில் முதலிடம் வகிக்கும் பகையை ஒடுக்கியதால் நாட்டிலே எவ்வகைத் தீங்கும் நேராவண்ணம் காத்தான் என்பது கருத்து.

மறுகுவது: கழல்வது அல்லது நிலைகெட்டுக் கலங்குவது. மறுக்கம்: மயக்கமுமாம். அரோ: அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Through all sixty thousand years as they passed,
  2. I crushed the enemies that rose and guarded this world;
  3. I have no other want; but that after me the world
  4. may fall into turmoil — that one fear torments me.'

What the poem says

Tacarataṉ has ruled for sixty thousand years and subdued every enemy. He lacks nothing except an heir.

What troubles him is not personal grief but the fear that after his death the world will fall into chaos with no worthy king to rule it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟupatiṉāyiram āṇṭum māṇṭu uṟa,
uṟu pakai oṭukki, iv ulakai ōmpiṉēṉ;
piṟitu oru kuṟai ilai; eṉ piṉ vaiyakam
maṟukuvatu eṉpatu ōr maṟukkam uṇṭuarō.'