கம்பராமாயணம் 172 · பால 5.4

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அரும் தவ முனிவரும், அந்தணாளரும்
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்,
இரும் துயர் உழக்குவர் என் பின், என்பது ஓர்
அரும் துயர் வருத்தும் என் அகம் அத்து ஐ' என்றனன்.

பொருள் · Meaning in Tamil

அருந்தவ முனிவரும் - அரியதவத்தை உடைய முனிவர்களும்; அந்தணாளரும் - அறவோர்களாகிய அந்தணர்களும்; வருந்துதல் இன்றியே - யாதும் வருத்தமுறுதல் இல்லாமலே; வாழ்வின் வைகினார் - துன்பமற்று நல்வாழ்விலே இருந்தார்கள்; என்பின் இருந்துயர் உழக்குநர் - (மக்கள் பேறில்லாத) எனது ஆட்சிக்குப் பிறகு (அப் பெரியவர்கள்) மிகவும் துன்பத்தாலே வருந்துவார்களே; என்பதோர் அருந்துயர் - என்பதொரு அரியதுயரமானது; என் அகத்தை வருத்தும் என்றனன் - எனது மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது என்றான்.

அருந்தவம் அருமைத்தவம் என்றதில் ‘மை’ கெட்டது. அந்தணாளர்: அந்தண்மையை ஆளுபவர் எனவே அறவோர். வைகினார்: நிலைத்து உள்ளார் என்பதும் பொருளாம். இருந்துயர்: மிகுந்த துன்பம். ‘இரு’ மிகுதியை உணர்த்தி நின்றது. என்பின்: எனக்குப் பிறகு. வருத்தும்: வருந்தச் செய்யும் என்பது பொருள். வாழ்வின்: வாழ்வு என்பதற்கு நல்வாழ்வு என்பது பொருள்.

தானும், தனது முன்னோரும் காத்த நெறிகளைத் தனக்குப் பிறகும் பேணிக்காத்து, தனது நற்குணங்களையே பெற்று நாட்டை நன்னெறியில் நிறுத்தி, ஆள, ஒரு புத்திரன் வேண்டுமே என நினைத்த தயரதன் நல்லதந்தையாகத் திகழ்கிறான் எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The sages of hard penance and the virtuous Brahmins
  2. have lived their lives without suffering;
  3. that after me they will be plunged in great sorrow — that one
  4. hard grief wears on my heart,' he said.

What the poem says

Tacarataṉ ends his plea. Under his rule the sages and Brahmins have lived without suffering. His deepest worry is that without a son to succeed him they will be left unprotected.

The commentary praises him as a good father in the making. He wants a son so that the good rule of his line will continue.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'arun tava muṉivarum, antaṇāḷarum
varuntutal iṉṟiyē vāḻviṉ vaikiṉār,
irun tuyar uḻakkunar eṉ piṉ, eṉpatu ōr
arun tuyar varuttum eṉ akattai' eṉṟaṉaṉ.