கம்பராமாயணம் 173 · பால 5.5

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முரசு அறை செழும் கடை முத்தம் மா முடி
அரசர்தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமலம் மென் பொகுட்டு மேவிய
வர சரோருகன் மகன் மனத்தின் எண்ணினான்.

பொருள் · Meaning in Tamil

முரசு அறை செழுங்கடை - முரசு முழங்கும் கடைவாயிலை உடையவனும்; முத்தமாமுடி அரசர் தம்கோமகன் - முத்து முதலிய மணிகளால் அமைந்த மணிமுடி தரித்திருப்பவனுமான, மன்னர் மன்னனாகிய தயரதன்; அனைய கூறலும் - அத்தகைய சொற்களைச் சொல்லும் (அது கேட்ட), விரை செறிகமலமென் பொகுட்டு மேவிய - மணம் செறிந்த தாமரை மலரின் அகவிதழ் உச்சியில் அமர்ந்திருப்பவராகிய; வரசரோருகன் மகன் - மேலான நான் முகனது மகனாகிய வசிட்டன்; மனத்தில் எண்ணினான் - (பின்வருவனவற்றை) தனது மனத்திலே நினைப்பானாயினான்.

முரசு: கொடை, போர், மணம் என்று மூன்று வகையினது. இங்குச் செழுங்கடை என்றதால் கொடை முரசே முழங்கியது எனலாம். முத்தமாமுடி: என்று கூறினும் ‘ஒரு மொழி தன் இனம் சுட்டும்’ என்றபடி ஏனைய மணிகளையும் கொள்ளலாம். ‘அரசர்தம் கோமகன்’ சக்கரவர்த்தி என்ற பொருளில் வந்தது. வரம்: மேன்மை. சரோருகம்: தாமரை. நீரில் முளைப்பது (சரம் - நீர், ருகம் - முளைப்பது) அதிலமர்ந்துள்ள பிரமனுக்குப் பெயராகும். ‘மனத்தில் எண்ணினான்’ என்றது, தான் முன்பே அறிந்ததாயினும் அதனை வெளிப்படுத்தலாகாமையால் ‘மனத்திலெண்ணினான்’ என்றார்.

மகப்பேறின்மை குறித்து, மன்னன் வசிட்டனிடம் கூறி, வருந்த, அதைக் கேட்ட அம்மாமுனிவன், தேவர்களுக்கு முன்பு திருமால் அருளியதைச் சிந்தித்தான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the king among kings, at whose rich gate the drums resound,
  2. who wears the great pearl crown, had spoken thus,
  3. the son of the Lord of the lotus, who sits upon the soft heart
  4. of the fragrant lotus flower, pondered in his mind.

What the poem says

Vaciṭṭaṉ is the son of Brahmā, who sits on a lotus, and he hears the king out in silence.

He thinks of something he already knows but may not reveal: Viṣṇu's old promise to the gods that he would be born on earth. The drums at the king's gate are those that announce his gifts to the poor.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muracu aṟai ceḻuṅ kaṭai mutta mā muṭi
aracartam kōmakaṉ aṉaiya kūṟalum,
virai ceṟi kamala meṉ pokuṭṭu mēviya
vara carōrukaṉ makaṉ maṉattil eṇṇiṉāṉ.