கம்பராமாயணம் 174 · பால 5.6

Section பால காண்டம் / 5. திருவவதாரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அலைகடல் நடுவண் - அலைகள் மிகுந்துள்ள பாற்கடல் நடுவே; ஓர் அனந்தன் மீமிசை - ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை மேலே; மலை என விழிதுயில் வளரும் - கரியமலை போல, கண்வளர்கின்ற, மாமுகில் - பெரிய மேகம் போன்ற (நிறமும், செயலுமுடைய) திருமால்; “கொலை தொழில் அரக்கர் தம் கொடுமை தீர்ப்பென்” என்று - உயிர்களைக் கொல்லுதலே தொழிலாக உடைய அரக்கரின் கொடுமையைத் தீர்ப்பேன் என்று; உலைவு உறும் அமரருக்கு - அவ்வரக்கர்களால் வருந்தும் தேவர்களுக்கு; உரைத்த வாய்மையை - சொன்ன வாக்குறுதியை.

முந்திய பாடலில் “எண்ணினான்” என்பதனுடன் “வாய்மையை” என்பது முடிகிறது. அலைகடல் என்று பொதுவாகக் கூறினாலும், திருமாலின் உறைவிடமான ‘பாற்கடல்’ என்று பொருள் உரைக்கப்பட்டது. மீமிசை: உருபின் மேல் உருபு வந்து ‘மிக மேலே’ என்ற பொருள் தந்து நின்றது. ‘மலை’ என்ற பொதுச்சொல்லும் திருமாலைக் குறிப்பதாதலின் ‘கரியமலை’ என்ற பொருளை உடையதாயிற்று. தேவர்களுக்கு அரக்கரால் மரணமில்லை என்பதை உணர்த்த ‘அமரர்’ என்றார். அமரர்: மரணமற்றவர். வாய்மை: வாக்குறுதி. அடுத்து வரும் 23 பாடல்கள் தேவர்களுக்குத் திருமால் வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. the promise that the great dark cloud who lies in waking sleep like a mountain
  2. upon the matchless Aṉantaṉ in the midst of the wave-tossed sea
  3. had given to the suffering gods, saying, 'I will put an end
  4. to the cruelty of the murderous demons.'

What the poem says

This verse completes the previous sentence. What Vaciṭṭaṉ called to mind was the promise Viṣṇu had made long ago. Dark as a rain cloud, he lies on the serpent Aṉantaṉ in the Ocean of Milk.

When the gods, tormented by the demons, came to him, he swore to end the demons' cruelty. The next twenty-three verses tell that earlier story in flashback.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1alai kaṭal naṭuvaṇ ōr aṉantaṉ mīmicai
malai eṉa viḻi tuyilvaḷarum mā mukil,
'kolaitoḻil arakkartam koṭumai tīrppeṉ' eṉṟu,
ulaivuṟum amararukku uraitta vāymaiyai.