கம்பராமாயணம் 1693 · அயோத்தியா 4.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மன்னன் கருணை நன்று” எனா நகும் - “சக்கரவர்த்தி உன்பால் காட்டிய இரக்கம் மிக நன்றாய் இருந்தது” என்று சிரிப்பாள்; நின்ற மைந்தனை நோக்கி - தன் எதிரே நின்ற இராமனைப் பார்த்து; “நெடுஞ் சுரத்துப் போவது என்று” எனா எழும் - நீண்ட காட்டு வழியில் போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்; இன் உயிர் பொன்றும்போது உற்றது - இனிய உயிர் போகும்போது அடைகின்ற மரண வேதனையை; உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல ஆனாள்.
தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர் அடைந்தாள் என்பதாம். ஏ - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'How kind the king is!' she says, and laughs;
- looking at her son standing there, she rises, saying 'When do you leave
- for the long wilderness road?'; she seemed to suffer
- all that one suffers when sweet life is ending.
What the poem says
Kōcalai laughs bitterly: what fine kindness the king has shown his son! Then she rises and asks Irāmaṉ when he is to set out on the long forest road, as if she means to go with him.
Her torment is like the agony of a person whose life is leaving the body.