கம்பராமாயணம் 1694 · அயோத்தியா 4.12

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்பு இழைத்த மனம் அத்து அரசற்கு நீ ,
என் பிழைத்தனை ? ' என்று நின்று ஏங்கும் ஆல் ;
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர்
பொன் பிழைக்கப் பொதிந்தனர் போல ஏ .

பொருள் · Meaning in Tamil

“அன்பு இழைத்த மனத்து அரசற்கு - உன்னிடத்தும் பேரன்பு செய்துவந்த மனத்தை உடைய தயரத சக்கரவர்த்திக்கு; நீ என் பிழைத்தனை - நீ என்ன தவறு செய்தாய்;” என்றுநின்று - என்று சொல்லிக் கொண்டு; முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் - முற்பிறவியிற் செய்த வினையால் இப்போது வறுமையில் வாடியவர்கள்; பொன் பிழைக்க - எதிர்பாராமல் கிடைத்த பொன்னானது தவறியதால்; புலம்பினர் போல - புலம்பியவர்களைப் போல; ஏங்கும் - வருந்துவாள் ஆயினள்.

பெறாது பெற்ற செல்வமாகிய புத்திரப் பேற்றை இப்போது காட்டிற்கு அனுப்பி இழக்கநேர்ந்தபடியால் வறுமையில் வாடியவர் பொன்னைப் பெற்று அதுவும் கைநழுவியபோது வருந்துவது போல வருந்தினாள் என உவமை கூறினார். பொன் தவறிப்போக இருக்க அதைத் திரும்ப இறுக்க மூடிப்பிடிப்பவர் எனவும், பொன் தவறிப் போகப் பொதிந்தனர் - அதாவது முகத்தை மூடிக்கொண்டு அழுபவர் போல எனவும், பொன் தவறிப்போகும்படி வைத்திருந்தவர் போல எனவும் பொருள் கூறுவது உண்டு, ஏற்பது கொள்க. ஆல், ஏ - அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'What wrong did you do to the king whose heart was woven with love?'
  2. she asks, and stands there moaning,
  3. like those sunk in a poverty brought on by deeds of a former life
  4. who wail when the gold they had found slips from them.

What the poem says

Kōcalai cannot understand it: what could Irāmaṉ have done to offend a king who has always loved him so much? She stands grieving.

She is like someone who has long lived in poverty because of past karma, suddenly finds gold, and then loses it again. Irāmaṉ, born after long childlessness, was such unexpected treasure, and now she is to lose him. The commentary records other readings of the phrase, without insisting on one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉpu iḻaitta maṉattu aracaṟku nī,
eṉ piḻaittaṉai?' eṉṟu niṉṟu ēṅkumāl;
muṉpu iḻaitta vaṟumaiyiṉ muṟṟiṉōr
poṉ piḻaikkap pulampiṉar pōlavē.