கம்பராமாயணம் 1695 · அயோத்தியா 4.13

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அறம் எனக்கு இலை ஓ ? ' எனும் ; 'ஆவி நைந்து
இற அடுத்தது என் ? தெய்வதங்காள் ! ' எனும் ;
பிற உரைப்பது என் ? கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து , கலங்கினாள் .

பொருள் · Meaning in Tamil

“எனக்கு அறம் இலையோ” எனும் - எனக்குத் தருமம் துணையாக இல்லையோ என்பாள்; தெய்வதங்காள் - தெய்வங்களே!; ஆவி நைந்து இறவு அடுத்தது என்? எனும் - உயிர் தேய்ந்து சாகும்படி வந்து நேர்ந்தது என்ன காரணம் என்பாள்; பிற உரைப்பது என்? - கோசலையின் அப்போதைய மனநிலைக்கு வேறு உவமை சொல்வது என்ன பயனுடைத்து; கன்று பிரிந்துழி கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் - தன் கன்று பிரிந்த பொழுது கறவைப் பசு துடிப்பதுபோல மனம் உருகிக் கலங்கித் துடித்தாள்.

‘இற அடுத்தது’ என அமைத்து ‘வ’கரத்தை உடம்படுமெய்யாக்குதலே நன்று. ‘இற’ - செயவென் வாய்பாட்டு வினையெச்சம். மரத்துப் போன பசு கன்று பிரிந்துழிக் கலங்காது ஆதலின் ‘கறவை’ என்னும் சொல்லால் ஈன்றணிமை உணர்த்தினார் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Have I no dharma to stand by me?' she says; 'O gods, why has it come to this,
  2. my life worn away and death at hand?' she says;
  3. what more is there to say? Like a milch cow
  4. parted from her calf, she melted and was distraught.

What the poem says

Kōcalai cries out: has righteousness abandoned her? She calls on the gods to tell her why she has been brought to the point of death.

The poet gives up trying to find a better comparison and offers the simplest: she is like a cow whose calf has been taken from her. He chooses the word for a cow still in milk, one that has calved recently, because an old cow that has stopped giving milk would not grieve so for its calf.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṟam eṉakku ilaiyō?' eṉum; 'āvi naintu
iṟavu aṭuttatu eṉ? teyvataṅkāḷ!' eṉum;
piṟa uraippatu eṉ? kaṉṟu pirintuḻik
kaṟavai oppak karaintu, kalaṅkiṉāḷ.