கம்பராமாயணம் 1697 · அயோத்தியா 4.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கற்பு உறுத்திய கற்பு உடையாள்தனை - கற்பு என்பது இப்படிப் பட்டது என்பதை உலகிற்கு உணர்த்தி நிறுத்திய பெருங் கற்பினை உடைய கோசலையை; வற்புறுத்தி - மன உறுதிப்படுத்தி; மனம் கொள - மனத்தில் படும்படி; தேற்றுவான் - தெளியப்பண்ண வேண்டி; பொற்பு உறுத்தன - அழகு பொருந்தியனவும்; மெய்ம்மை பொதிந்தன - உண்மை நிரம்பியனவும்; சொற்புறுத்தற்கு உரியன - தாய்க்கு மகன் சொல்லுதற்குத் தகுந்தனவுமாகிய சொற்களை; சொல்லினான் - சொன்னான்.
கல்லின் தன்மை போல உறுதிப்பாடுடைய கற்பு என உரைப்பினும் அமையும். கற்பின் தன்மை உலகம் அறிய உணர்த்திய கற்பு என்பதைச் ‘சலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே’ என்று (2061) இராமன் சீதையை அழைப்பது கொண்டும் அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Words full of grace, filled with truth,
- fit for a son to speak, he spoke,
- to strengthen her whose chastity taught the world what chastity is,
- and to comfort her so that her heart would accept it.
What the poem says
Irāmaṉ sets out to steady his mother's heart and bring her to accept what must happen. He chooses words that are gracious, truthful and proper for a son to say to his mother.
Kōcalai is described as a woman whose faithfulness showed the world what wifely virtue is. The commentary compares a later verse in which Irāmaṉ speaks of Cītai as one who taught even Aruntati, the model of the faithful wife, what that virtue means.