கம்பராமாயணம் 1698 · அயோத்தியா 4.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“சிறந்த தம்பி திரு உற - (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன் அரசச்செல்வம் பெற; எந்தையை - என் தந்தையாகிய தயரதனை; மறந்தும் பொய் இலன் ஆக்கி - மறப்பினாலும் பொய் சொல்லாத சத்திய வாக்கினனாகச் செய்து; வனத்திடை - காட்டில்; உறைந்து தீரும் உறுதி பெற்றேன் - வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையை அடைந்தேன்; இதின் - இதைக்காட்டிலும்; யான் பிறந்து பெறும் பேறு என்பது யாவதோ?” - யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற பாக்கியம் என்பது வேறு என்ன இருக்கிறது; (இல்லை).
‘பங்கம் இல் குணத்து எம்பி’ என்றது (1608) போல இங்கும் ‘சிறந்த தம்பி’ என்றது காண்க. ‘யாவதோ’ ஓகாரம் வினாப் பொருளில் வந்தது. இனி, யாவது என்பதே வினாவாதலின், ‘ஓ’ காரம் எதிர்மறை குறித்தது எனினும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'So that my excellent brother gains the royal fortune, making my father
- one who never, even by forgetting, speaks falsely, I have won the good
- of dwelling in the forest and completing my term; what greater blessing
- could I gain by being born than this?'
What the poem says
Irāmaṉ presents his exile as the best thing that could happen to him. Through it his brother, whom he calls 'excellent', gains the kingdom; his father is kept from ever being false to his word; and he himself earns the good of living in the forest for the appointed time.
What greater good, he asks, could his birth bring him? As earlier, he speaks of Paratan only with praise.