கம்பராமாயணம் 1699 · அயோத்தியா 4.17

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'விண்ணும் , மண்ணும் , இவ் வேலையும் , மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் இறந்து ஏகினும் ,
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு
ஒண்ணுமோ ? இதற்கு உள் அழியேல் ! ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

“விண்ணும் - ஆகாயமும்; மண்ணும் - பூமியும்; இவ்வேலையும் - இந்தக் கடல்களும்; மற்றும் வேறு எண்ணும் பூதம் எலாம் - வேறாகிய தீ, காற்று முதலாகிய மூலப்பொருள்களும்; அழிந்து ஏகினும் - மாறுபட்டுக் கெட்டுப் போனாலும்; அண்ணல் - தயரதனது; ஏவல் - கட்டளையை; மறுக்க - மறுப்பதற்கு; அடியனேற்கு ஒண்ணுமோ - அடியேனுக்குத் தகுமோ; இதற்கு -; உள் அழியேல் - (நீ) மனம் வருந்தாதே;” என்றான்.

‘ஏகினும்’ என்பது அவை நிலை கெடாமை உணர்த்தி நின்றது. தயரதன் கட்டளையை அவ்வாறே நிறைவேற்றுதலே தனக்குத் தகுதி என்றான் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Even if the sky, the earth, this ocean, and all the other
  2. elements that are counted were to perish and pass away,
  3. could I, your servant, refuse the command of my noble lord?
  4. Do not let your heart break over this,' he said.

What the poem says

Irāmaṉ tells his mother that even if the sky, the earth, the oceans and all the elements were destroyed, it would still be impossible for him to disobey his father's command.

The extreme 'even if' stresses how unthinkable refusal is to him. He asks her not to let her heart be crushed by grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'viṇṇum, maṇṇum, iv vēlaiyum, maṟṟum vēṟu
eṇṇum pūtam elām aḻintu ēkiṉum,
aṇṇal ēval maṟukka aṭiyaṉēṟku
oṇṇumō? itaṟku uḷ aḻiyēl!' eṉṟāṉ.