கம்பராமாயணம் 1702 · அயோத்தியா 4.20

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“வரிவில் எம்பி - கட்டமைந்த வில்லினை உடைய என்தம்பி பரதன்; இம் மண்அரசு ஆய் - இந்தக் கோசல நாட்டுக்கு அரசன் ஆகி; அவற்கு - அந்தப் பரதனுக்கு; மாநிலம் உரிமை உற்றபின் - பெரிய இராச்சியத்தின் உரிமை நிலைப்பட்ட பிறகு; கொற்றவன் - தயரதன்; திருவின் நீங்கி - அரச போக வாழ்க்கையிலிருந்துவிலகி; தவம் செய்யும் நாள் - தவம் செய்கின்ற காலத்தே; உடன் - அவனோடு சேர்ந்து; அருமை நோன்புகள் - செயற்கரிய விரதங்களை; ஆற்றுதி ஆம் - செய்வாயாக. '

வரத்தால் அரசன் ஆயினும், மக்கள் அவன் வழிப்படவும் அவன் ஆட்சி உறுதி பெறவும் சில காலம் செல்லுமாகலின், “மாநிலம் உரிமை உற்ற பின் என்றான் இராமன். வானப்பிரநதநிலையில் மனைவியை உடன்கொண்டு தவம் செய்தல் உண்டாதலின் உடன்சென்று அரிய விரதங்களைச்செய்க என்றானாம். “அன்று”, “ஏ' அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Once my brother of the banded bow becomes king of this land, and to him
  2. the right to the great realm is secured, the victorious king
  3. will leave his royal fortune and do penance; in those days, with him,
  4. you shall perform hard vows; is that not so?'

What the poem says

Irāmaṉ continues to console his mother. Paratan, now to be king, will need some time before the people accept him and his rule is firm. After that, Tacarataṉ will give up royal life and retire to penance, and Kōcalai can share that ascetic life with him.

The commentary notes that in the forest-dwelling stage of life a man practised austerities with his wife at his side, so Irāmaṉ gives her a worthy task of her own.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vari vil empi im maṇ aracu āy, avaṟku
urimai mā nilam uṟṟapiṉ, koṟṟavaṉ,
tiruviṉ nīṅkit tavam ceyum nāḷ, uṭaṉ
arumai nōṉpukaḷ āṟṟuti ām aṉṟē.'