கம்பராமாயணம் 1703 · அயோத்தியா 4.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“நீ சித்தம் திகைக்கின்றது என்? - தாயே, நீ மனம் தடுமாறுவது எதனால்; தேவரும் - தேவரும்; ஒத்த - தம் நிலைக்குப் பொருந்திய; மாதவம் செய்து - சிறந்த தவத்தைச் செய்து; உயர்ந்தார் அன்றே? - தம் நிலைக்கு மேலாகஉயர்ந்தார்கள் அல்லவா;
ஆண்டுகள் எத்தனைக்கு உள - (நான் பிரிந்து செல்கிற)ஆண்டுகள் எவ்வளவு உள்ளன; அவை பத்தும் நாலும் பகல் அல்லவோ? - அந்தப் பதினான்குஆண்டுகளும், பதினான்கு நாள்கள் அல்லவா? (இதற்கு வருந்துவானேன்.)
“நான் காட்டிற் சென்று தவம் புரிந்து மேன்மை அடைய அல்லவா போகிறேன்! இதற்கு நீ மனம் தடுமாறலாமா' என்று தாயைத் தேற்றினான். ஆண்டுகளை நாள்கள் என்று குறுக்ககியது தேறுதல்வார்த்தை யாகும். “எண்ணிய சில நாளில் குறுகுதும்' என்று பின் (1984) குகனிடமும் இவ்வாறு கூறுதல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Why is your mind bewildered? Did not even the gods
- rise high by performing great penance fit for them?
- How many are the years? These here,
- ten and four, are they not mere days?' he said.
What the poem says
Irāmaṉ tells his mother that he goes to the forest to gain merit by penance, just as the gods rose through austerity. The fourteen years of exile are nothing; he calls them fourteen days.
Shrinking years into days is a word of comfort. Later, when he meets the boatman Kukaṉ, Irāmaṉ will again speak of returning within a few days.