கம்பராமாயணம் 1704 · அயோத்தியா 4.22

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'முன்னர்க் கோசிகன் என்னும் முனிவரன்
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்
பின்னர் எய்திய பேறும் , பிழைத்த ஓ ?
இன்னம் நன்று , அவர்க்கு ஏயின செய்தலே . '

பொருள் · Meaning in Tamil

“முன்னர் - தந்தையார் விசுவாமித்திர முனிவனிடம் வேள்விகாக்க அனுப்பிக் கையடை கொடுத்த போது; கோசிகன் என்னும் முனிவரன் - விசுவாமித்ததிரனாகிய கௌசிக முனிவனது; அருள்தலை - கருணையினால்; தாங்கிய - (நாங்கள்) பெற்ற; விஞ்சையும் - மந்திர வித்தைகளும்; பின்னர் எய்திய பேறும் - பிறகு அடைந்த திருமணப் பேறும்; பிழைத்தவோ? - தவறியவோ; அவர் ஏயின செய்தல் - வனம்சென்று அத்தகைய முனிவர்கள் ஏவிய காரியங்களைச் செய்து முடித்தல்; இன்னம் நன்று - இன்னமும் நல்லதையே தரும்.

விசுவாமித்திரனால் கிடைத்த விஞ்சை பலை, அதிபலை என்ற இரண்டு மந்திரங்கள். பின்புஎய்திய பேறு சீதா கல்யாணம், அடுத்துப் பரசுராமனது ஆற்றலை ஒடுக்கியதையும் சொல்லலாம். மேலும், முனிவர்களுக்குத் தொண்டு செய்து வனத்தில் தங்குவதால் நலமே விளையும் என்றான் இராமன். 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Earlier, from the great sage called Kōcikaṉ,
  2. the arts I received through his grace,
  3. and the good fortune that came after, did they fail me?
  4. Better still will it be to do what such sages bid.'

What the poem says

Irāmaṉ reminds his mother of the time his father sent him with the sage Vicuvāmittiraṉ (Kōcikaṉ) to guard a sacrifice. From the sage he received the secret mantras Palai and Atipalai, and afterwards came his marriage to Cītai and the humbling of Paracurāmaṉ.

That service to a sage turned out well; so too, serving the sages of the forest will bring only good.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṉṉar kōcikaṉ eṉṉum muṉivaraṉ
taṉ aruḷtalai tāṅkiya viñcaiyum
piṉṉar eytiya pēṟum, piḻaittavō?
iṉṉam naṉṟu, avar ēyiṉa ceytalē.'