கம்பராமாயணம் 1706 · அயோத்தியா 4.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“மகர வேலை மண் தொட்ட - சுறாமீன்களை உடைய கடலாற் சூழப்பெற்ற இப்பூமியைத் தோண்டிய; வண்டு ஆடு தார்ச் சகரர் - வண்டுகள் தேனுண்டு ஆடுகின்ற மாலை அணிந்த சகரபுத்திரர்கள்; தாதை பணிதலை நின்று - தம் தந்தை சொல்லைத் தம் தலைமீது கொண்டு சென்று; தம் புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய - தமது குற்றமற்ற உடம்பின்கண் உள்ள இனிய உயிரை இழந்ததனால் உண்டாகிய; நிகர் இல் மாப்புகழ் - சமானம் இல்லாத பெரும்புகழ்; நின்றது அன்றோ - இவ் வுலகத்ததில் இன்றும் நிலைபெற்றுள்ளது அல்லவா; ' எனா - என்று சொல்
ஒருவேளை தந்தையினது கட்டளையை மேற்கொண்டு வனம் சென்று உயிர் போமாயினும் அதுவும் பெரும்புகழையே தனக்குத் தரும் என்றான். சகரர் தந்தை கட்டளைப்படி வேள்விக் குதிரையை நாடிச்சென்று அதனாலேயே சாம்பலானார்கள். ஆயினும், அதுவே அவர்களுக்குப் பெரும் புகழைத் தந்தது என்பது கூறி, “என் முன்னோர் தந்தை பணி கடவாமை போல யானும் அவ்வாறே நடத்தல் என் குலதருமம் அன்றோ” என்றான் இராமன். “மண்ணில் மகர வேலை தொட்ட” என இயைத்துப் பூமியின் கடலைத் தோண்டிய எனப் பொருள் கூறுதலும் ஒன்று. சகரரால் தோண்டப்பட்டது ஆதலின் “சாகரம் எனக் கடலுக்குப் பெயர் ஆயிற்று. “இவர் குலத்தோர் உவர்நீர்க் கடல் தொட்டார் எனின் வேறுஓர் கட்டுரையும் வேண்டுமோ' (644.) என்ற இடத்து இவ்வரலாற்றைக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The Cakarar, wearing garlands where bees dance, who dug the earth
- girdled by the sea of sharks, held their father's command upon their heads,
- and gave up the sweet life in their flawless bodies;
- does not their matchless great fame endure?' he said.
What the poem says
Irāmaṉ cites his own ancestors, the sons of King Cakaraṉ. Searching for their father's lost sacrificial horse, they dug through the earth and were burnt to ashes by a sage, yet their obedience won them lasting fame. The ocean is called cākaram after them.
Even if going to the forest at his father's word were to cost him his life, Irāmaṉ says, it would only bring glory, and to obey a father is the dharma of his line.