கம்பராமாயணம் 1713 · அயோத்தியா 4.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“அரசர்க்கு அரசே!'- சக்கரவர்த்தியே; இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு - இருள் ஒழியும்படி பொருந்தி விளங்குகின்ற சூரியனுக்கு, எதிரும் திகிரி - ஒப்பாகிய ஆணைச் சக்கரத்தை; உருளத்தனி உய்த்து - உலகெங்கும் செல்லும்படி ஏகசக்ராதிபதியாகச் செலுத்தி; ஒரு கோல் நடையின் - ஒப்பற்ற செங்கோல் செலுத்தப் படுதலின்; கடைகாண் உலகம் - யாதொரு இடையூறும் இன்றி முடிவு அழியும்படி; முற்றுறும் அப்பகலில் - முடிவடைகின்ற அந்த ஊழிக்காலத்தில்; புகுதற்கு என்றோ அருளக்கருதிற்று - செல்லும்படி நுழைதற்காகவோ நீ அருள்கொண்டு செய்யக் கருதிய செயல்; இதுவோ? - இதுதானோ; என்னும் - என்பாள்.
மக்களது வறுமை, அறியாமை இருளகல விளங்குதல், நாட்டின் எல்லா இடங்களிலும் செல்லுதல் ஆகியவற்றால் சூரியனுக்கு ஒப்பானது ஆணைச் சக்கரம் என்பதாம். உன் அரசாட்சியில் நலம்பெற்ற உலகம் பிரளயகாலத்து அழிவை அடையக் கருதியோ இத்தகைய செயலைச் செய்யக் கருதியது என்று தயரதனை நோக்கிப் புலம்பினள் கோசலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Driving alone your wheel of command, the match of the sun that shines to end the darkness,
- so that it rolls everywhere, by the way of a single sceptre, the world that has seen its end,
- when all its substance perishes, at that final day, to enter it?
- Is this what you meant to grant? O king of kings!' she says.
What the poem says
Kōcalai continues to lament. Tacarataṉ's wheel of command, like the sun, drove away the darkness of poverty and ignorance and ran to every corner of the land under one just sceptre.
She asks whether the world that flourished under his rule is now to be sent into the ruin of the end of an age, and whether this is the gift he intended for it.