கம்பராமாயணம் 1714 · அயோத்தியா 4.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“திரை ஆர் கடல்சூழ் உலகின் தவமே! - அலை பொருந்திய கடலாற் சூழப்பெற்ற உலகம் செய்த தவத்தின் பயனே; திருவின் திருவே! - செல்வங்களுக்கெல்லாம் மேலான செல்வமே; நிரை ஆர் கலையின் கடலே! - ஒழுங்குபொருந்திய கல்விக்கலையில் கடல் ஆனவனே; நெறி ஆர் மறையின் நிலையே! - நீதிபொருந்திய வேதத்தின் உண்மைப் பொருளே; கருணாலயனே! - அருட்கோயிலாக உள்ளவனே; உலகு ஏழ் உடையாய்! - ஏழ் உலகங்களையும் உடையவனே; கரையா அயர்வேன் எனை - மனம் உருகிச் சோர்வடைகின்ற என்னை; நீ என் என்று உரையா இதுதான் அழகோ? - நீ ஏன் வருந்துகிறாய் என்று ஆறுதல் கூறாது இப்படிக் கிடப்பதுதான் அழகாகுமோ; என்னும் -
தன் மனைவிபடும் துயரத்தைக் கண்டு வைத்தும் எழுந்து அவளுக்கு ஆறுதல் சொல்லாது கணவன் கிடக்கின்ற நிலை கண்டு மனம் வருந்திப் புலம்பினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Penance of the world girdled by the wave-filled sea! Fortune of fortune!
- Ocean of well-ordered learning! Abiding truth of the Veda that holds the right way!
- Me, who melt and faint, you, O house of compassion, without saying 'Why?'
- is it fitting to lie like this? Lord of the seven worlds!' she says.
What the poem says
Kōcalai heaps praise on her husband: he is the reward of the world's penance, the highest of all wealth, an ocean of learning, the very meaning of the Vedas, a temple of grace.
Yet he does not rise to ask why she weeps. Seeing him lying silent while his wife suffers, she cries out that this is not worthy of him.