கம்பராமாயணம் 1715 · அயோத்தியா 4.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மகனே! - இராமனே; மின் நின்றனைய மேனி - மின்னல் மறையாது ஒருபடித்தாக நின்றால் ஒத்த ஒளிவீசும் உடம்பு; வெறிதாய் விட நின்றது போல் - உள்ளே உயிரற்றுக் கிடப்பது போல; உன்னும் தகைமைக்கு அடையா உறுநோய் - நினைக்கும் தன்மைக்கும் வாராத பெரும் பிணியை; உறுகின்று உணரான் - அடைகின்றதையும் உணர முடியாதவனாய்; என் என்று உரையான் - அழுகின்ற என்னைப் பார்த்து ஏன் புலம்புகிறாய் என்றும் சொல்லாதவனாய் உள்ளான் உன் தந்தை, என்னே! - என்ன காரணமோ; இதுதான் யாது என்று அறியேன் - இது எதனால் ஆகியது என்று அறியாதவளாக இருக்கின்றேன்; மன்னன் தகைமை காண - அரசனாய் தயரதனது நிலைமையைப் பார்க்க; வாராய்' - வருவாயாக; என்னும் -
உணர்வு இழந்து மூர்ச்சித்துக் கிடக்கிற மன்னனைப் பார்த்து அவன் நிலை காண வரும்படி மகனை அழைத்துப் புலம்புகிறாள் கோசலை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'His body, like lightning standing still, as if it had become empty,
- he does not feel the great sickness, beyond all thought, that is upon him;
- he does not say 'Why?'; alas! What this is I do not know;
- come and see the state of the king, my son!' she says.
What the poem says
Kōcalai now calls to Irāmaṉ. The king's body, once radiant like lightning that does not fade, lies as if lifeless; he does not feel the unimaginable affliction that has seized him, nor ask why she weeps.
She does not understand what has happened and begs her son to come and see his father's condition.