கம்பராமாயணம் 1716 · அயோத்தியா 4.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இவ்வாறு அழுவாள் இரியல் குரல்சென்று இசையாமுன்னம் - இப்படிச் சொல்லிப் புலம்புகிற கோசலையின் கூக்குரல் போய் மன்னர்கள் கூடியிருக்கும் அவையை அடைந்த அளவில்; ஒளிவாள் நிருபர் முனிவர் - ஒளி பொருந்திய வாள் உடைய அரசர்களும் முனிவர்களும்; “ஒவ்வாது ஒவ்வாது” என்னா - இது இக்கால இயல்புக்குப் பொருந்தாது என்று தம்முள் கூறி; (வசிட்டனை நோக்கி); அவ் ஆறு அறிவாய் என்ன - இந்த அழுகையின் காரணத்தை உடனே சென்று அறிக என்று சொல்ல; முனிவன் வந்தான்- வசிட்ட முனிவன் அங்கு வந்து சேர்ந்தான்; அவனும் - வசிட்டனும்; வெவ்வாள் அரசன் நிலை கண்டு- கொடியவாளை உடைய தசரதன் நிலைமையைப் பார்த்து; விளைவு என்னாம்” என்று உன்னா - நடந்தது என்னவோ என்று கருதி.
கைகேயி வரம் பெற்றது முதலிய நிகழ்வுகளை அறியாதவன் வசிட்டன் ஆதலின், “என்னாம் விளைவு' என்று கருதினான். இதன் முடிவு என்னாகுமோ? என்று அஞ்சியதாகவும் கூறலாம். முடிசூட்டுவிழாவுக்குக் கூடிய மன்னர் முனிவர் காதில் அழுகைக்குரல் விழுந்தபடியால் அவர்கள் பதற்றம் அடைந்து “ஒவ்வாது ஒவ்வாது ' என்றனர். இது விரைசொல் அடுக்கு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the sound of her wailing, as she wept like this, had fully spread,
- 'It is not fitting! It is not fitting!' said the kings with shining swords and the sages,
- 'Find out what this is,' they said, and the sage came; and he,
- seeing the state of the king of the fierce sword, thought, 'What will come of this?'
What the poem says
Kōcalai's cries reach the hall where kings and sages have gathered for the coronation. Alarmed, they say this is out of keeping with such a day and ask the royal priest Vacittaṉ to go and find out the cause.
Vacittaṉ, who knows nothing yet of Kaikēyi's boons, comes and sees the king lying senseless, and wonders what has happened and how it will end. The doubled 'it is not fitting' expresses their haste and alarm.