கம்பராமாயணம் 1719 · அயோத்தியா 4.37

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சொற்றாள் - (கைகேயி) சொன்னாள்; சொல்லாமுன்னம் - அவள் சொல்லிய அளவிலே (வசிட்டன்); சுடர்வாள் அரசர்க்கு அரசை - ஒளி பொருந்திய வாளை உடைய சக்கரவர்த்தியை; பொன் தாமரை போல் கையால் - தன்னுடைய பொற்கமலம் போன்ற கைகளால்; பொடி சூழ் படி நின்று எழுவி - புழுதி சூழப்பெற்ற மண்ணிலிருந்து தூக்கி; “கற்றாய்! அயரேல் - எண்ணில் பல்நூல் ஆய்ந்து கடந்த அறிவாளனே, சோர்வடையாதே; அவளே நின் காதற்கு அரசைத் தரும் - அந்தக் கைகேயியே நின் அன்பு மகனாகிய இராமனுக்கு அரசாட்சியைத் தருவாள்; செயல் எற்று? - வருந்தும் செயல் எத்தன்மைத்து; நீ இன்று ஒழி' - நீ இவ்வருத்தத்தை இப்பொழுதே ஒழிப்பாயாக; என்று என்று இரவா நின்றான் - என்று பலமுறை சொல்லி வேண்டி நின்றான்.

துன்பம் வந்துழி வருந்தல் கற்றோர்க்கு அழகன்று என்பதால் “கற்றாய்! அயரேல் என்றான். காதலுக்கு (அன்புக்கு) உரியவனைக் “காதல் என்றே குறித்த

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as she had spoken, the king of kings with the shining sword
  2. he raised with his hands like golden lotuses from the dust-strewn ground,
  3. 'Learned one! Do not faint; she herself will give the kingdom to the son you love;
  4. what is this you do? Give it up today,' he said again and again, entreating.

What the poem says

The moment Kaikēyi finishes, Vacittaṉ lifts Tacarataṉ from the dusty floor with his gentle hands and pleads with him again and again.

He tells the king, a man of great learning, not to give way to grief, since sorrow in adversity does not become the learned. Kaikēyi herself, he says, will give the kingdom back to Irāmaṉ, the son he loves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1coṟṟāḷ collāmuṉṉam, cuṭar vāḷ aracarkku aracai
poṉ tāmarai pōl kaiyāl poṭi cūḻ paṭiniṉṟu eḻuvi,
`'kaṟṟāy! ayarēl; avaḷē tarum niṉ kātaṟku aracai;
eṟṟē ceyal? iṉṟu oḻi nī'' eṉṟu eṉṟu, iravāniṉṟāṉ.