கம்பராமாயணம் 1721 · அயோத்தியா 4.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காணா - அரசன் மூர்ச்சை தெளிந்தது கண்டு; “ஐயா! - ஐயனே; நீ இனி கழிபேர் அவலம் ஒழிவாய் - நீ இனிமேல் இம்மிகப் பெரிய துன்பத்தை நீக்கிக்கொள்வாயாக; ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் - புருஷோத்ததமனாகிய இராமனே இனி இந்நாட்டை ஆட்சி செய்வான்; இடையூறு உளதோ? - அதற்கு வேறு இடையூறு ஏதேனும் இருக்கின்றதா, இல்லை; மாணா உரையாள் - மாட்சியை இல்லாத வார்த்தையாகிய வரத்தைக் கேட்ட கைகேயியானவள்; தானே தரும் - (அரசைத்) தானே இராமனுக்குத் திருப்பித் தருவாள்; மாமழையே அனையான் - பெரிய மேகத்தை ஒத்தவனாகிய இராமன்; பூணாது ஒழிவான் எனின் - அரசை மீண்டும் மேற் கொள்ளாது போவானாயின்; யாம் உளமோ?- நாங்களும் இருக்கப் போகிறோமா; பொன்றேல்! - மனம் அழியாதே; என்றான் -
தன் சொற்கேட்டுக் கைகேயி மறுக்க மாட்டாள் என்னும் துணிபுபற்றி வசிட்டன் 'ஆண்நாயகனே இனி நாடு ஆள்வான் என்றான். 'ஏ' காரம் தேற்றம். கைகேயி தந்துவிடுவாள், ஒருவேளை இராமன் ஏற்காது போனால் என்று ஓர் ஐயத்தை எழுப்பி, அப்படியாயின், 'யாம் உளமோ' என்று அதற்கு ஒரு பதிலும் உரைத்தான் முனிவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing this, he said, 'Sire! Now put away this exceeding great grief;
- that prince among men shall rule the land; is there any obstacle?
- She of the unworthy words will give it herself; and if he who is like the great raincloud
- should not take it up, would we still live? Do not despair,' he said.
What the poem says
Seeing the king revive, Vacittaṉ reassures him: Irāmaṉ, best of men, will still rule, for Kaikēyi, who asked such unworthy boons, will surely give the kingdom back at the sage's word.
He even raises the doubt that Irāmaṉ might refuse to accept it, and answers it himself: if that happened, none of them could go on living. Irāmaṉ is compared to a great raincloud for his generosity and dark complexion.