கம்பராமாயணம் 1722 · அயோத்தியா 4.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ற அம்முனிவன் தன்னை - என்று ஆறுதல் கூறிய அவ்வசிட்ட முனிவனை நோக்கி (தயரதன்); “கோவே! - ஆசார்யத் தலைவனே!; நினையா வினையேன் யான் இனிப் பொன்றும் அளவில் - நினைக்க இயலாத கொடிய வினையுடைய யாம் மேல் இறந்துபடுவதற்கு முன்னால்; அவனைப் புனைமா மகுடம் புனைவித்து - அந்த இராமனை அணிதற்குரிய முடியைச் சூடும்படி செய்து; ஒன்றும் வனம் என்று - காட்டுக்குப் போவோம் என்று; (அவன் தன் மனத்தில்) உன்னா வண்ணம் செய்து - நினையாதபடி செய்து; என் உரையும் - என் வாக்கும்; குன்றும் பழி பூணாமல் - இழிவாகிய பழி மேற் கொள்ளாதபடி; காவாய் - காப்பாற்றுவாயாக! என்றான் -
கைகேயியால் இம்மாற்றம் நிகழ வேண்டும் என்பதை 'என் உரையும் குன்றும் பழி பூணாமல் காவாய்' என்ற தயரதன் வேண்டுகோளால் அறியலாம். தன் சத்தியத்தில் சிறிதும் தவறாத தயரதன் பெருங் குணநலமும் இங்கே வெளிப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To that sage who spoke thus he said: 'Before I, of unthinkable deeds,
- perish now, have him crowned with the great crown he should wear,
- and so act that he does not think, "Let us go to the forest"; and let my word
- not take on the blame of falling short; protect me, my lord!' he said.
What the poem says
Tacarataṉ, revived, answers Vacittaṉ. Before he dies, he begs, let the sage see Irāmaṉ crowned and keep him from setting his heart on the forest.
But he also asks that his own word should not be shamed. The change must therefore come from Kaikēyi releasing him from his promise, not from the king breaking it; even now Tacarataṉ will not let his truthfulness slip.