கம்பராமாயணம் 1723 · அயோத்தியா 4.41

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முனியும் , முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி ,
'இனி , உன் புதல்வற்கு அரசும் , ஏனையோர்க்கு இன் உயிரும் ,
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி , வசை தீர்
புனிதம் மருவும் புகழே புனையாய் பொன்னே ! ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

முனியும் - வசிட்ட முனிவனும்; முனியும் செய்கைக் கொடியாள் - வெறுக்கும் செயலைச் செய்த கொடியவளாகிய கைகேயியின்; முகமே முன்னி - முகத்தை நோக்கி; “பொன்னே! - பொன்னெனச் சிறந்தவளே; இனி - இப்பொழுது; உன் புதல்வற்கு அரசும் - உன் மகனாகிய இராமனுக்கு அரசாட்சியையும்; ஏனையோர் உயிர்க்கு உயிரும் - மற்றவர்களது உயிர்க்கு உயிர்ப்பையும்; மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் - வைவஸ்வத மனுவின் வமிசத்திற் பிறந்த உன்னுடைய நாயகனான தசரதனுக்கு உயிரையும்; உதவி - கொடுத்து; வசை தீர் - பழிநீங்கிய; புனிதம் மருவும் - தூய்மை பொருந்திய; புகழே புனையாய்! - புகழை அணிகலனாக அணிந்து கொள்வாய்; என்றான் -

இராமனுக்கு அரசு கொடுத்தாலன்றி ஏனைய எதுவும் நிலை பெறாது ஆகையால் அதனை முதலிற்கூறினான். இராமனைக் கான் ஏகாது தடுத்தல் நோக்கம் ஆயினும் இராமன் கான் ஏகாமல் அரண்மனையில் இருந்தால் அவனே அரசேற்க உரியவன் ஆதலின் “அரசு உதவி' என்றான். இராமனை 'உன்புதல்வன்' என்ற கைகேயி கூற்றும், “தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால் கேகயன் மடந்தை” என்ற நகர மக்கள் கூற்றும் (1453, 1591) உறுதிப் படுத்தல் அறிக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sage too, turning to the face of her of hateful deeds and cruelty,
  2. said: 'Now, granting the kingdom to your son, and life to the life of all others,
  3. and life to your husband of Maṉu's line, take as your ornament
  4. the fame that is pure and free of reproach, my golden one!'

What the poem says

Vacittaṉ now addresses Kaikēyi directly and gently, calling her 'golden one'. By giving the kingdom to Irāmaṉ, whom he calls her son, she would restore life to everyone and to her husband of the solar line of Maṉu, and win spotless fame.

The commentary notes that he names the kingdom first because nothing else can stand unless Irāmaṉ rules, and that calling Irāmaṉ her son matches what Kaikēyi herself and the townspeople said earlier: he was raised by her rather than by his own mother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉiyum, muṉiyum ceykaik koṭiyāḷ mukamē muṉṉi,
'iṉi, uṉ putalvaṟku aracum, ēṉaiyōr uyirkku uyirum,
maṉuviṉ vaḻi niṉ kaṇavaṟku uyirum utavi, vacai tīr
puṉitam maruvum pukaḻē puṉaiyāy poṉṉē!' eṉṟāṉ.