கம்பராமாயணம் 1724 · அயோத்தியா 4.42

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மொய் மாண் வினை வேர் அற வென்று ஒழிவான் மொழியாமுன்னம் ,
விம்மா அழுவாள் , 'அரசன் மெய்யில் திரிவான் என்னில் ,
இம் மா உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் ; என்சொல்
பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் ' என்றாள் .

பொருள் · Meaning in Tamil

மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் - நெருங்கிய ஆற்றல் அமைந்த வினைகளை அடியோடு போம்படி வெற்றி கொண்டு தவத்தால் உயர்ந்த வசிட்டன்; மொழியாமுன்னம் - சொல்லிய அளவில் (கைகேயி); விம்மா அழுவாள் - விம்மி அழுது; “அரசன் மெய்யின் திரிவான் என்னின் - சக்கரவர்த்தி தான் கொடுத்த வரமாகிய சத்தியத்திலிருந்து மாறுபடுவானாயின்; இம் மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் - இந்தப் பெருமை பொருந்திய உலகத்தில் உயிரோடு இனிமேல் வாழ்தலை விரும்பமாட்டேன்; என் சொல் பொய்ம் மாணாமற்கு - என் வார்த்தை பொய்யாகாமைக்காக; இன்றே- இன்றைக்கே; பொன்றாது ஒழியேன் - இறந்து படாமல் இருக்க மாட்டேன்; என்றாள்.

அரசன் சொன்ன சொல் தவறினாலும், நான் சொல்லிய சொல்லிருந்து தவற மாட்டேன், தவறினால் உயிர்துறப்பேன் என்றாள் கைகேயி. அழுவாள் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he who rose by conquering, root and all, the dense and mighty deeds had finished speaking,
  2. she, sobbing and weeping, said: 'If the king turns from his truth,
  3. in this great world I will no longer care to live; so that my word
  4. does not become a lie, I will not fail to die this very day.'

What the poem says

Vacittaṉ, who rose high by penance and destroyed the roots of his karma, has barely finished when Kaikēyi bursts into sobs.

She threatens that if the king goes back on the boons he swore, she will take her own life today rather than see her own word proved false. Even if the king breaks his promise, she says, she will not break hers.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1moym māṇ viṉai vēr aṟa veṉṟu uyarvāṉ moḻiyāmuṉṉam,
vimmā aḻuvāḷ, 'aracaṉ meyyiṉ tirivāṉ eṉṉil,
im māṇ ulakattu uyirōṭu iṉi vāḻvu ukavēṉ; eṉ col
poym māṇāmaṟku iṉṟē poṉṟātu oḻiyēṉ' eṉṟāḷ.