கம்பராமாயணம் 1729 · அயோத்தியா 4.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“பாவி! - பாவியே; நெஞ்சம் கண்டேன் - உன் மனக்ககருத்ததை இப்போது அறிந்தேன்; நான் கனிவாய்க் கனி வாய் விடம் நெடுநாள் உண்டேன் - நான் அன்போடு பழம்போன்ற உன்னுடைய வாயிலிருந்த விடத்தை நீண்ட நாள் சாப்பிட்டுவிட்டேன்; அதனால்; நீ என் உயிரை முதலோடு உண்டாய் - நீ என்னுடைய உயிரை அடியோடு சாப்பிட்டுவிட்டாய்; உன்னைப் பண்டே எரிமுன் தேவியாகக் கொண்டேன் அல்லேன் - உன்னை முன்பு வேள்வித் தீயின்முன் மனைவியாக (நான்) கொள்ளவில்லை; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன் - (எனக்கு) வேறு ஒரு தனியான யமனைத் தேடித் திருமணம் என்ற பெயரில் செய்து கொண்டேன்.'
“நாவில் நஞ்சம்' என்றது போலக் “கனிவாய் விடம்' என்றது காண்க. “நீ மனைவியல்லள், என் உயிரைக் கொல்ல வந்த யமன்' என்றான் தசரதன். "எரி என்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை, அட்டில் புகாதாள் அரும்பிணி அட்டதனை, உண்டி உவவாதாள் இல்வாழ் பேய் இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை" என்பது (நாலடி. 363.) நினைத்தற்குரியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I have seen your heart; the poison of your fruit-like mouth I, lovingly, for long days
- have drunk; and so you have eaten up my life, root and all;
- long ago, before the fire, you, sinner, as my queen
- I did not take; I sought out another Death and took her.'
What the poem says
Tacarataṉ now sees Kaikēyi's true heart. For years he lovingly drank what he took for the sweetness of her fruit-red lips; it was poison, and now it has consumed his life entirely.
When he married her before the sacred fire, he says, he did not take a wife but sought out a second god of death. The commentary sets this beside the 'poison on the tongue' of the previous verse and cites a Nālaṭiyār verse on the kinds of wife who are death to the husband who married them.