கம்பராமாயணம் 1731 · அயோத்தியா 4.49

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்னே பலவும் பகர்வான் , இரங்காதாளை நோக்கிச்
'சொன்னேன் ; இன்றே இவள் என் தாரம் அல்லள் , துறந்தேன் ;
மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனை உம் மகன் என்று
உன்னேன் , முனிவா ! அவன் என் உரிமைக்கு ஆகான் ' என்றான் .

பொருள் · Meaning in Tamil

இன்னே - இவ்வாறு; பலவும் பகர்வான் - பல சொற்களையும் சொல்பவனாய தயரதன்; இரங்காதாளை நோக்கி - சிறிதும் மனம் இளகாத கைகேயியைப் பார்த்து; முனிவா! - முனிவரே; இன்றே சொன்னேன், இவள் என் தாரம் அல்லள், துறந்தேன் - இப்பொழுதே சொல்லிவிட்டேன்; இவள் இனி என் மனைவி என்னும் தகுதிக்கு உரியவள் அல்லள் - இவளை நான் கைவிட்டேன்; மன்னே ஆவான் வரும் அப்பரதன்தனையும் - அரசனாக முடி சூடுதற்கு வருகின்ற இவள் மகனாகிய அந்தப் பரதனையும்; மகன் என்று உன்னேன் - என் மகன் என்று கருதேன்; அவனும் உரிமைக்கு ஆகான் - அப்பரதனும் எனக்குச் செய்யவேண்டிய இறுதிக்கடன்களுக்கு உரியவனாகான்.' என்றான்.

கைகேயியை மனைவி அல்லள் எனவும், பரதனை மகன் அல்லன் எனவும் துறந்தான் தயரதன். அதை முனிவன்பால் அறிவித்தான். பகர்வான், இரங்காதாள் - வினையாலணையும் பெயர்கள். சொன்னேன் - உறுதிபற்றிய கால வழுவமைதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying many such things, he looked at her who felt no pity:
  2. 'I have said it; from today she is not my wife; I have cast her off;
  3. and that Paratan who comes to be king, him too as my son
  4. I do not count, O sage! Nor shall he have the right,' he said.

What the poem says

Tacarataṉ, turning to the unmoved Kaikēyi, formally renounces her before Vacittaṉ: she is no longer his wife.

He goes further and disowns Paratan as well, saying he will not regard him as his son and that Paratan shall have no right to perform his funeral rites. The commentary notes that 'I have said it', in the past tense, expresses the certainty of his decision.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉē palavum pakarvāṉ, iraṅkātāḷai nōkkic
'coṉṉēṉ; iṉṟē ivaḷ eṉ tāram allaḷ, tuṟantēṉ;
maṉṉē āvāṉ varum ap parataṉ taṉaiyum makaṉ eṉṟu
uṉṉēṉ, muṉivā! avaṉum ākāṉ urimaikku' eṉṟāṉ.