கம்பராமாயணம் 1732 · அயோத்தியா 4.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(தயரதன்) உயர் கோசலையை - உயர்ந்த கோசலையைப் பார்த்து; “என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான் - என்னைப் பார்த்துப் போகாதவாறு இடையூறு உடைய இராமன்; உன்னைக் கண்டும் இலனோ? - உன்னையும் பார்த்துப் போகவில்லையே; என்றான் - ; பின்னை - பிறகு; கண்தான் அனையான் - தசரதனின் கண்ணை ஒத்த இராமன்; பிரியக் கண்ட துயரம்- தன்னைப் பிரிய அதனால் தயரதன்பால் ஏற்பட்ட துன்பத்தை; கண்டே - பார்த்து; தவிர்வாள் - (இராமனைக் கான் ஏகாதபடி தயரதன்பால் சொல்லித் தடுக்க வேண்டும் என்று எண்ணி வந்த கருத்தை) ஒழிவாளானாள்; தளர்வான் நிலையில் தளர்வாள் - சோர்கின்ற தயரதனைப்போலவே அவளும் சோர்வாளானாள்.
தந்தையைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் காடு ஏகுவதாயின் முடியாது. அச்செயல் இடையூறுபடும் என்று கருதி இராமன் தயரதனைப் பார்த்துச் சொல்லிக்கொள்ளாமல் சென்றான் என்பதுபற்றி 'இடையூறு உடையான்' என்றார். இராமனைக் கான் ஏகாது தடுக்கும் தன்மை தயரதன்பால் இல்லை என்பதும், கைகேயி மாட்டே அது உள்ளது என்பதும் நிகழ்வுகளின் மூலம் அறிந்தாள் ஆதலின் வந்த கருத்தை ஒழித்துத் தயரதன் போலவே அவளும் தளர்வாளானாள். /632 ஆம் பாடல் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He who, seeing me, feared a hindrance to his going
- did he not see you either?' he asked the noble Kōcalai;
- then, seeing the grief of parting from him who was like his eye,
- she gave up her purpose, and grew faint as he grew faint.
What the poem says
Tacarataṉ asks Kōcalai whether Irāmaṉ, who avoided coming to his father for fear of being held back, also left without seeing her.
Kōcalai had come to beg the king to stop the exile. But when she sees the grief that parting from Irāmaṉ, dear as his own eye, has brought him, she understands that the king has no power to hold their son back; only Kaikēyi has. She abandons her plan and sinks into weakness just as her husband does.